தனது தாயாருக்காக்க அர்ப்பணிக்கப்பட்ட பாடல் வெளியான சில ஆண்டுகளுக்கு பின்னர், இந்திராணி பெரேரா தாய்மை மற்றும் தாய்மார்கள் பற்றிய ஒரு தனிப்பட்ட கதையை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். ‘மதகய அசுரேன்‘ எனும் பாடலானது ஒரு மகள் இறந்த தன் தாய்க்காக அஞ்சலி செலுத்தும் விதத்தில் பாடியது போல் அமைந்தது. இந்திராணி பெரேராவின் தாயார் மிக இளம் வயதிலேயே இறந்து விட்டார். அதனால் இந்திராணிக்கு அவரது மூத்த அக்கா மல்லிகா தாயாக இருந்து வந்தார். காலத்தின் போக்கில் அவரும் இந்திராணியை விட்டு பிரிந்து சென்றார். இதனால் அவர் தெரிவித்த அஞ்சலியானது அவரை ஈன்ற தாய்க்கும் அவரை தாயாக இருந்து பார்த்து கொண்ட அக்காவுக்கும் உரியது என்று தெரிவித்தார்.
இந்திராணி பெரேரா ‘தி த்ரீ சிஸ்டேர்ஸ் ‘ எனும் பிரபல்யமான குழுவில் அனைவராலும் தெரியப்பட்ட ஒருவராக இருந்தார். இந்த குழுவில் இருந்த சகோதரிகளுக்கு எதையும் விட சகோதரத்துவம் மிக முக்கியமாக இருந்தது.

மூன்று சகோதரிகளான மல்லிகா, இந்திராணி பெரேரா மற்றும் இறங்கணி பெரேரா ஆகியோர் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்களது தாயார் ஒரு சிறந்த பாடகராகவும் பியானோ வாத்தியத்தை நன்கு வாசிக்க கற்றவராகவும் இருந்தார். அவரது தந்தையார் எந்த வாத்தியத்தையும் கற்று இருக்கவில்லை என்றாலும் அவர் இசையை நன்கு நேசிப்பவராக இருந்தார். மேலும் அவர் முகமத் கௌஸின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவர் கௌஸ் மாஸ்டர் என அனைவராலும் அறியப்பட்டவர் ஆவார்.
மல்லிகா ப்ரஸ்பதேறியன் பெண்கள் பாடசாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார், அங்கு அவர் மற்றும் இறங்கணி இருவரும் படித்தனர். அவர் 10 வயதிலிருந்து YMBA இல் நடைபெற்ற அமரதேவாவின் இசைக் கழகங்களில் கலந்து கொண்டார். பின்னர் அது இந்திராணியை வானொலி நிகழ்ச்சிகளில் பாட வழிபடுத்தியது. அதன் பின்னர் ‘சமா‘, ‘தாஹாசக் சித்தில்லி‘, ‘ஜீவன கங்கா‘ போன்ற திரைப்படங்களில் பெரும் பின்னணி பாடகராக மல்லிகா உருவெடுத்தார்.
இறங்கணி பெரேரா ஆறு வயதில் இருக்கும் போது அவர்களது தாயார் புற்று நோயால் இறந்தார். அவ்வேளையில் சகோதரிகள் மூவரும் பெரும் கஷ்டத்தை உணர்ந்தனர். மூத்தவரான மல்லிகா தனது சிறிய சகோதரிகளை பார்த்து கொள்வதட்காக குடும்ப பொறுப்புகளை ஏற்று கொண்டார். இதட்காக அவர் பள்ளி படிப்பை இடை நிறுத்தி சகோதரிகளை முறையாக பார்த்து, தந்தை மற்றும் சகோதரிகளிடையே வலுவான பிணைப்பை ஏட்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
இந்திராணி இயற்கையில் நடனத்தில் பெரும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இவர் நடனத்தை பிரபல வஜிரா மற்றும் சிட்ரஸேனா ஆகியோரின் பாதங்களில் கற்று கொண்டார். வகுப்புக்கு வெளியிலே காத்திருக்கும் போது பாடல் பாடும் திறனை தானே வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். அவரது பள்ளி ஆசிரியை திருமதி. பட்கர் இந்திராணியின் பாடல் பாடும் திறனை அடையாளம் கண்டார். அவரது அதிபர் திருமதி. வலேரி இதை உட்சாகப்படுத்தினார். அதன் பின் பள்ளிக்காக சிலோன் வானொலியில் அவர் செய்த பதிப்பை கொண்டு முதலாவது பொது நிகழ்ச்சியை எதிர் கொண்டார்.
இந்திராணி ஒரு பின்னணி பாடகராக டாலரின் என்பவரால் அவரது இசைக்குழுவான ‘ஃபயர்–ஃப்ளீஸ்‘ இல் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1969 ஆம் ஆண்டில் இந்திராணி அந்நேஸ்லீ மற்றும் கிளாரென்ஸ் ஆகியோரின் “தி மூன்ஸ்டோன்ஸ்” இல் ஐந்தைந்து தன் முதல் பாடலான “திலானி” பாடலை பாடினார். இது பெரும் வெற்றியை பெற்றது.


சகோதரிகளுள் இளையவரான இறங்கணி குடும்பத்தால் ‘ஜீன்‘ என்று அழைக்கப்பட்டார். அவர் சேஷா பலிஹக்காரா பள்ளியில் நடனம் கற்றார். பின்னர் மிராண்டா ஹேமலதாவிடம் நடிப்பு பள்ளிக்கும் சென்றார். இது அவருக்கு சில திரைக்கதைகளில் சில பாத்திரங்களை இயட்குவதட்கு உதவியாக அமைந்தது ( உதாரணமாக ‘சாமா‘, ‘அடராய் கருணாவை‘, ‘தஹசக் சித்தில்லி‘)
அறிமுகம்
அவர்களின் தந்தையின் முழு ஆதரவைக் கொண்டு தந்தையின் ஆலோசனையுடன் தங்கள் சொந்த வாத்தியங்களுடன் சொந்த இசை குழுவை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் ‘ப்ளூ பேர்ட்‘ என்று பெயரிட்டு பின்னர் ‘சூப்பர் ஸ்டார்ஸ்‘ என்று மாற்றிக் கொண்டனர். 1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஹோட்டல் டொப்ரபேன் (இப்போது கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் ) என்று அழைக்கப்படும் ஹோட்டலில் மூவரும் சேர்ந்து தங்கள் முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதன் பின்னர் இவர்கள் ‘தி த்ரீ சிஸ்டேர்ஸ் ‘ என அழைக்கப்பட தொடங்கினர். சிங்கள பாப் இசையில் முதல் பெண் குரல் குழுவாக இவர்கள் கருதப்பட்டனர்


சூரியா லெபெலின் கீழ் அவர்களது முதல் ஆல்பம் ஆனது ‘தி த்ரீ பெரேரா சிஸ்டேர்ஸ் இன் ஹார்மோனி‘ எனும் பெயரில் வெற்றி பாடல்களான ‘களு கெள்ள மமை‘, ‘அக்கலா நங்கிலா‘ ஆகிய பாடல்களை உள்ளடக்கி வெளியானது.

பயணம்
அவர்களின் அடுத்த இரண்டு ஆல்பம்கள் சூரியா லெபெலின் கீழ் வெளியாயின, ஒன்று ‘ தி த்ரீ சிஸ்டர்ஸ் எ கோ கோ‘ எனும் பெயரில் ‘மல்வாகே அபி‘, ‘வர்சிட்டி கெல்லோ‘,’சமரு போத‘ மற்றும் ‘இந்துனில் மேனிக்க‘ ஆகிய பாடல்களை உள்ளடக்கியும், ‘தி சென்சேஷனல் த்ரீ சிஸ்டேர்ஸ்‘ எனும் பெயரிலும் வெளிவந்தன. அனால் இதன் மூலமே இறங்கணி ‘ மே கீ மம கயன்னே‘ எனும் பாடலைப் பாடி முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.
அவர்களின் பாடல்களை பதிய ஆதரவளித்த அச்சகாப்தத்தின் முன்னணி இசைக்கலைஞர்களான எம்.கே. ராம்காமி (வயலின்), ராஜ் ஜலால்டின் (கிட்டார்), குமார் மோலிகோடா (சாக்சபோன்), பெல்லா கிர்கஸ் (சாக்சபோன்) மற்றும் லாரிஃப் மிஸ்கின் (ட்ரம்பெட்) ஆகியோரின் ஆசிர்வாதத்தை சகோதரிகள் பெரிதும் பெற்று இருந்தனர்.




சகோதரிகள் மூவரும் சூரியா நடத்திய நேரலை நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பற்றியதுடன் வானொலியில் நடக்கும் சூரியா நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்து கொண்டனர்.



சகோதரிகள் தங்கள் தந்தையின் உதவியுடன் தங்கள் சொந்த பதிவுப் பதிப்பை ஆரம்பித்தனர்.
மல்லிகா 1987இல் மல்லிகா புற்று நோயால் இறக்கும் வரை இருபது வருடங்களாக மூன்று சகோதரிகளும் சிறந்த ஒரு இசை வாழ்க்கையை வாழ்ந்தனர். பின்னர் காலம் செல்ல இந்திராணி ஒரு தனி இசை கலைஞராக தனி வாழ்க்கை ஒன்றை வெற்றிகரமாக வாழ தொடங்கி இன்றும் அதில் வெற்றி காண்கிறார்.
இறங்கணி அவ்வப்போது மேடைகளில் இந்திராணிக்கு துணையாக தங்கள் பழைய வெற்றி படைப்புகளை பாட ஒன்றிணைந்தார். காலம் சென்ற கிளாரென்ஸ் விஜேவர்தனேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி நடந்த ‘அந்நேஸ்லீ அண்ட் இந்திராணி இன் கான்செர்ட்‘ எனும் நிகழ்ச்சியில் ‘ தி த்ரீ சிஸ்டேர்ஸ்‘ இன் பழைய பாடல்களை பாட இந்திராணியுடன் அவர் அக்கா மல்லிகாவின் மகள் ஹிரண்யா கைகோர்த்து தன் அறிமுகத்தை ஏட்படுத்திக் கொண்டார்.
இலங்கையில் தமிழ் சமூகத்தினரிடையே பிரபல்யம் அடைந்தனர். சகோதரிகள் மூவரும் இணைந்து சில தமிழ் பாடல்களையும் பாடினர்.

EDITED BY MALINDA SENEVIRATNE

Sooriya Golden Oldies

Kandayam Gee (Hits In Harmony)
