கொழும்பில் உள்ள புறநகர்ப்பகுதி கொட்டஹேனாவிலிருந்து வருகை தந்த நான்கு சகோதரர்கள் கிறிஸ்டி, மேக்ஸ்வெல், மெல்ரோய் மற்றும் ரொனால்ட் ஆகியோர், தங்கள் குழந்தைப்பருவத்திலிருந்து ஒரு இசை பின்னணியைக் கொண்டிருந்தனர்.அவர்களது அம்மா அவர்களுக்கு ஹார்மோனிகாவை வாசிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவர்கள் தங்களுக்கு குழு மேலாளர் போல் இருந்த தங்கள் அம்மாவால் அதிகம் உற்சாகமூட்டப்பட்டு கொண்டு இருந்தனர்.
அவர்களுள் இளைய சகோதரர்களான மேல்ரோய், ரொனால்ட் ஆகியோர் “தர்மரத்னே ப்ரதர்ஸ்” எனும் பெயரில் பாடசாலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். பின்னர் மூத்த சகோதரர்களான மக்ஸ்வெல் மற்றும் கிறிஸ்டி இருவரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் குடும்பமாக, பல திருமண நிகழ்வுகளிலும் பலரின் குடும்ப விழாக்களிலும் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வர தொடங்கினர்.


அவர்கள் கிறிஸ்டோபர் பால், வின்சென்ட் டீ பால், சுனில் சாந்தா போன்ற பிரபலமான கலைஞர்களின் சிறந்த பதிப்புகளை பாடுவதைத் தொடர்ந்து, சகோதரர்கள் தங்களது சொந்த இசையை உருவாக்கி பாடத் தொடங்கினர்.
அவர்கள் குழுவாக பங்கு பெட்ரா ஒரு போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்டதோடு சிலகாலம் கொஞ்சம் இடைவெளியினை பெற்று கொண்டனர். பின்னர் இவர்கள் தேசிய பாடசாலை ஒன்றில் “கலகட்ட பெத்லகேமே” மற்றும் “லான்தரமா எல்லெனே” ஆகிய இரு பாடல்களையும் பாட வாய்ப்பளிக்கப்பட்டனர்.
இவர்களே முதலாவது சிங்கள பாப் குடும்பமாக எல்லாராலும் கருதப்பட்டார்கள்.
அறிமுகம்
தர்மரத்னே ப்ரதர்ஸ், “லா சிலோனியர்களின்” நோயல் ரணசிங்க்கே உடன் ஒன்றிணைந்து மேக்ஸ்வெல் தர்மரத்னதால் நிதி திரட்டும் நோக்கத்துடன் “ஆசிரி குசும்” எனும் பெயரில் செயின்ட் பிரிட்ஜெட்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மேடையில் முதன் முறையாக பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு இசை வாசித்து சிறப்பித்தவர்கள் ‘சாங்ஸ் ஆப் லங்கா கிளப்‘ இசை குழுவினர்கள் ஆவர். எல்லா இசைக்குழுக்களும் காங்கோ டிரம்ஸ் மற்றும் பாக்ஸ் கிட்டார் வசிக்கும் தருணத்தில் தர்மரத்னே ப்ரதர்ஸ் காங்கோ ட்ரும்ஸ்க்கு பதிலாக றபான் கை டிரம்ஸ் ஐ கொண்டு வாசிக்க தொடங்கினர்.
இவர்களின் இசை நிகழ்ச்சியால் கவரப்பட்ட ‘பட்ரிக் கொரேரா‘ என்பவர் இவர்களுக்கு பாடல்கள் பல பதிவு செய்வதட்கான வாய்ப்பினை தனது பிலிப்ஸ் லெபிலில் வழங்கினார்.
1968 இல் வெளியிடப்பட்ட “வெசா வஹினவா“, “புஞ்சி ஹுரதலா“, “கன்டுகாரே” மற்றும் “நோண்டி கிரா” ஆகிய பாடல்கள் பெரும் பிரசித்தி பெற்றன மட்டுமில்லாமல் இவர்களை வெளிச்சம் போட்டு காட்டின.


பயணம்
அவர்களின் அடுத்த படைப்பான ‘வசிட்டி கொல்லோ‘ ஆனது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்ததுடன் மேடை நிகழ்ச்சிகளில் பெரும் வரவேட்பையும் பெற்று இருந்தது. ஆரம்பத்தில் இது முறையாக பதிவு செய்யப்பட்ட ஒரு பதிப்பாக இருக்கவில்லை. காரணம், அரசியல் ரீதியாக பிரச்சனைகள் இப்பாடலுக்கு வரலாம் என எதிர் பார்க்கப்பட்டதால் இதை பதிவேற்ற எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அது முற்றாக தடை செய்யப்படகூடிய வாய்ப்பினையும் கொண்டு இருந்தது. ஆனாலும் அதன் பிரபல்யம் அறிந்து சூர்யா லெபெலின் கேரல்ட் என்பவர் அப்பாடலை பதிவேற்ற வாய்ப்பினை அளித்தார்.
அதன் பின் பிரசித்தி பெற்ற படைப்புகளான ‘வர்சிட்டி கொல்லோ‘, ‘சுஹாடா பத்தூம்‘ (பிறந்தநாள் பாடல்), ‘ஆவ்வா‘ மற்றும் ‘பிரியங்கிகா‘ ஆகியன ‘தர்மரத்னன் சகோதரர்களின் குடும்ப ஆபரணங்கள்‘ என்ற பெயரில் கருதப்பட்டன.
தர்மரத்னே ப்ரதர்ஸ் சூர்யா தயாரிப்பில் டெக்கா லெபெலின் கீழ் தங்கள் அடுத்த படைப்பை வெளியிட்டார்கள்


70 களின் முற்பகுதியில், அவர்களது மருமகள் ஷிரோமி பெர்னாண்டோ இசைத் துறைக்குள் நுழைந்தார், அவரின் சொந்த படைப்புகள் பல வெற்றி பெற்றன. பின்னர் தர்மரத்னே ப்ரதர்ஸ் மற்றும் ஷிரோமி பெர்னாண்டோ கூட்டணியில் ‘பொருவடா அண்ட அண்ட‘ , வாஹிடாக ககனோடரே‘, ‘ராஜ குமாரி‘ மற்றும் ‘முற்றுமேனிக‘ ஆகிய பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பு ஒன்றினை வெளியிட்டார்கள்.


மேல்ரோய் என்பவரே இவர்களது பல பாடல்களுக்கு பாடலாசிரியராக இருந்தார். ஆனால் மெல்லிசை பாடல்கள் பல மெல்ரோய் மற்றும் ரொனால்ட் ஆகிய இருவராலும் எழுதப்பட்டன. இவர்களது படைப்புகளில் மழையை பற்றி பாடிய ‘வஸ்ஸ‘ , வெயிலை பற்றிய பாடிய ‘அவ்வ ‘ , மலை நாட்டை பற்றி பாடிய ‘கண்டுக்கறே‘ போன்ற இயற்கையை புகழ்ந்து பாடிய பாடல்கள் பிரசித்தி பெற்றன.

இவர்களுக்கு மீண்டும் மேடை நிகழ்ச்சிகள் நடாத்த வாய்ப்புகள் அளித்த மால்கம் ஆண்ட்ரி மற்றும் ஜெயதிஸ்ஸ ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு மிகவும் நன்றி உடையவர்களாக இவர்கள் இருந்துள்ளனர்.
ஆண்டுகள் பல சென்றன குழுவின் செயற்பாடுகள் குறைந்து அவ்வாறே நின்றது. கிறிஸ்டி 1978 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கிற்கு சென்றார், இதனால் குழுவில் குழப்பம் ஏற்பட்டது. மேலும் 1987 ல் ரொனால்ட் ஒரு பேருந்து விபத்தில் இறந்தார்.
1997 ஆம் ஆண்டில் மெல்ராய், மேக்ஸ்வெல் மற்றும் கிறிஸ்டி ஆகியோர் மேடையில் மீண்டும் வந்தனர். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் தங்கள் மௌனம் களைத்து அன்னெஸ்லியால் ’70 களின் நட்சத்திரங்கள்‘ எனும் நிகழ்ச்சியில் அறிமுகமாயினர். பின்னர் மூன்று சகோதரர்களும் மீண்டும் பல நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் கிடைத்தது.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று, இவர்கள் எழுபதுகளில் பெரிய நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கச்சேரி நடாத்தி தங்கள் 40 வருட இடை வாழ்க்கையை கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு அன்னெஸ்லி மலாவனா, இண்திராணி பெரேரா, அனில் பாரேட்டி மற்றும் விஜய கோரியா ஆகியோர் வருகை தந்து இருந்தமை குறிப்பிடதக்கது.

