
சிங்கள இசையின் அடையாளத்தையும் உருவாக்குவதிலும் இசை சார் கல்வியையும் வளர்ப்பதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த சுனில் ஷாந்த அவர்கள் அவரது சிஷ்யர்களால் ‘குருதேவி‘ என அழைக்கப்பட்டார்
ஜா–ஏல, தெஹியகத்தவில் பிறந்த சுனில் ஷாந்த அவர்கள் தன் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் அவரது பாட்டியுடனும் மாமனார்களுடனும் வளர்ந்து வந்தார். அவரது இயற்பெயரான பத்தலியனகே டான் ஜோசப் ஜோன் என்பது பிற்காலத்தில் மாற்றப்பட்டது. அவர் தெஹியகத்த கல்லூரி, புனித பெனடிக்ட் கல்லூரி, புனித ஆலோசியஸ் கல்லூரி, மற்றும் காலியிலமைந்த தூதெல்ல கல்லூரியில் கல்வி பயின்றார்.
இசைப்பிரியரான தனது சிறிய மாமனார் எம்.ஜெ.பெரேரா அவர்களிற்கு வாசிப்பதற்காக சுனில் ஷாந்த அவர்கள் ஹார்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே அவரது திறமைகள் வெளிக்கொணரப்பட்டன, அவ்வாறே அகில இலங்கை ரீதியில் பள்ளிக் கல்வி சான்றிதழ் பரீட்சையில் வீரரத்னே விருதை வென்றார். ஒரு ஆசிரியராக வேண்டு என்னும் இலக்குடன் பள்ளிக்கல்வியை நிறைவுற்ற அவர், 1933ஆம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கான இறுதிப்பரீட்சைகளை பூர்த்திசெய்து கல்கிசை கல்வாரி கல்லூரியில் ஆசிரியர் பணியை ஆரம்பித்தார். 1936 முதல் 1939 வரை தெற்கு பள்ளிகளிடையான இசை போட்டியை அவர்களது சிஷ்யர்கள் வென்றதனூடாகவும் கல்வாரி கல்லூரி சவால் கோப்பையை வென்றதனூடாகவும் சுனில் அவர்களின் நாடக மற்றும் இசை திறன்கள் வெளிக்கொணரப்பட்டன.
தான் இசைமேல் கொண்ட பிரியத்தினால், சுனில் அவர்கள் இடைநிலை காந்தர்வ பரீட்சைகளை நிறைவு செய்து, உடட்பயிட்சிக்கான சான்றிதழைப்பெற்று,கிட்டாருடன் இணங்க பியானோ வாசிக்கக்கற்றுக்கொண்டார். அதேவேளை, சிங்கள நாட்டுப்புற பாடல்களையும் உடைபோல பண்டா குரானான்ஸேயிடமிருந்து ‘வண்ணம்‘ பாடல்களையும் கற்றுக்கொண்டார். சுனில் அவர்கள் 1939ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள சாந்தினிகேதனுக்கும் 1941ஆம் ஆண்டு முதல் பாத்கண்டே சங்கீத் வித்யாபித்தில் நான்கு வருடங்களும் தங்கினார். இசைக்கருவி(சித்தார்) மற்றும் பாட்டில் சங்கீத் விஷாரத் பட்டப்படிப்பில் முதலாம் தரத்துடன் சித்தி பெற்ற முதல் இலங்கையர் இவராவார்.
1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு தேர்ச்சி பெற்ற இசைக்கலைஞராக இலங்கைக்கு திரும்பினார் ‘சுனில் ஷாந்த‘.
அறிமுகம்
அரசாங்கம், இசை கண்காணிப்பாளர் எனும் புதிய பதவியை நியமிக்கும் வேளையில், சுனில் ஷாந்த அவர்கள் கல்லூரிக்கற்பித்தல் பணியை விடுத்து ஜா–எலவில் உள்ள கணுவனவில் இசை வகுப்புகளை ஆரம்பித்தார். ராபியில் தென்னகோன் மற்றும் முனிதாச குமாரதுங்க அவர்களின் நூல்களினூடாக அறிவொளி பெற்ற சுனில் ஷாந்த அவர்கள் சிங்கள இசை மற்றும் அதன் தோற்றம் பற்றிய தேடலை ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் பம்பலபிட்டியவிலுள்ள சூரியசங்கர் மொல்லிககொடாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். மேலைத்தேய மற்றும் இந்திய இசையில் மேன்மைபெற்ற இவர், தனது திறமைகளை கொண்டு ஆரம்பத்திலிருந்தே காணப்பட்டபோதும், பிற்காலத்தில் ஏனைய இசையால் வருகையால் மறைக்கப்பட்ட எமக்குரிய சிங்கள இசைகளை புதுப்பித்தார்.
1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி சுனில் ஷாந்த அவர்கள் முதன்முதலாக குமாரதுங்க அவர்களின் நினைவுதினக்கூட்டத்தில் பாடியமை அவர் அவர் முதன்முதலாக இலங்கை வானொலியில் ‘ஒலு பிப்பிலா‘ எனும் இலங்கையில் முதன்முதலாக பதிவிடும் பாடலை பாடும் வாய்ப்பைப்பெற்றார். அவரது அடுத்தடுத்த மெல்லிசைகளான ‘ஹந்தப்பனே‘, ‘கோகிலயாங்கே‘, ‘லங்கா லங்கா‘, ‘ஜேசு உபன்னே‘, மற்றும் ‘பாவித்தியா தன் பலுக்கன் வாறே‘ போன்ற பாடல்கள் பெரும் புகழ் பெற்றன. அவரது பாடலான ‘இமிஹிரி சுவதேதி மால் ஐ மேதரம் ஹனிகேத பரவுயே‘ அவரது நண்பரான சூரியசங்கர் மொல்லிகொட அவர்களின் இறப்பிற்க்காக அர்ப்பணிக்கப்பட்டது.
வழிப்பயணம்
1946ஆம் ஆண்டு சுனில் ஷாந்த அவர்கள் தனது முதல் நூலான ‘ரிதி வளவ‘ வை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து ‘ஹெல ரிதி வளவ‘, ‘மிஹிரியாவ மல் மிஹிர‘, ‘ஹெலி மிஹிர‘, ‘சுனில் ஹந்த‘, ‘சோங் போலியோ‘, ‘சோங் ஒப் லங்கா‘, ‘குவான் தொட்டில்ல‘, ‘தேசிய சங்கீதய‘, மற்றும் ‘சங்கீதயே அத்திவாரம‘ எனும் நூல்களை வெளியிட்டார்.
இந்திய பாடல் இசைகளை சிங்கள பாடல்களில் பயன்படுத்துவதற்கெதிரான சுனில் ஷாந்தவின் போராட்டமானது பெரும் போட்டியாளர்களுக்கு வழிவகுத்தது. இந்தியாவிலுள்ள பாட்கண்டேயில் சுனிலின் வாத்தியாராக அமைந்த பண்டித் ரத்தன்ஜங்கர் அவர்களை 1952ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்கு ஒரு குரல்த்தேர்வில் இலங்கை கலைஞர்களை தரமிட அழைக்கப்பட்டிருந்தார். இத்தேர்வில் பங்குகொள்ள மறுத்தவர்கள் இலங்கை வானொலியில் இருந்து விலக்கப்பட்டனர். அவ்வாறாக விளக்கப்பட்டவர்களில் சுனில் ஷாந்த, ஆனந்த சமரகோன் மற்றும் பீ.டான்ஸ்டன் டீ சில்வா ஆகியோர் அடங்குவர். இலங்கை வானொலியில் அமைந்த சுனில் ஷாந்த அவர்களின் பாடல் பதிப்புக்கள் சேதமடைந்தன. அதனைத்தொடர்ந்து சுனில் தனது வாழ்வாதாரத்திற்காக ஆடை விற்பனை, புகைப்படம் பிடித்தல், இலத்திரனியல் கருவிகளை சரிபார்த்தல் போன்ற பல தொழில்களையும் முயற்சி செய்து பார்த்தார்.

அதேவேளை அவர் ஒரு பயிட்சி அளிக்கப்பட ஆசிரியையான பெர்னாடெட் லீலாவதி ஜயசேகர அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
அவர் மருதானை ‘நியூ டவுன்‘ கட்டிடத்தில் சங்கீதவகுப்புகள் ஆரம்பித்து, அவர் கஷ்டத்தில் திகழ்ந்த போதிலும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்ட 10 குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்பெடுத்தார். வளர்ந்து வரும் வயலின் கலைஞரான ஆல்பர்ட் பெரேரா (W.D.அமரதேவ என புகழ்பெற்றவர்) அவர்களின் திறமையை கண்டறிந்தவர் சுனில் ஆவார். இவர் அவரது பல பாடல்களுக்கும் விஒளின் வாசித்ததோடு தனது பானத்திரையில் அமைந்துள்ள சங்கீத வகுப்புகளில் கற்பிக்கவும் வாய்ப்பளித்தார். சுனில் அவர்களின் சிறந்த மாணவர்களுள் புகழ் பெட்ரா பாடகர் ஐவோர் டெனிஸ் மற்றும் பற்றிக் தென்பிடிய அவர்கள் அடங்குவர். அக்காலகட்டத்தில் லங்காதீப பத்திரிக்கையினூடாக நடாத்தப்பட்ட பிரச்சாரங்களுக்காக சுனில் ஷாந்த அவர்களுக்கு பொருளாதார உதவி செய்தவர் ஊடகவியலாளரான டீ.பீ.தனபால அவர்கள் ஆவார்.
1956ஆம் ஆண்டு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் ‘ராகவ எனும் திரைப்படத்திற்கு இசையமைக்க சுனில் ஷாந்த அவர்களை அழைத்த போது அவரது புகழ் அடுத்தபடியை எட்டியது. அருட்தந்தை மார்செல்லின் ஜயகொடி அவர்களால் எழுதப்பட்ட பாடல்களான, ‘சிகிரி லன்டாக்கே‘, ‘ஒழு நெலும்‘, ‘வெசாக் கேகுலு‘, ‘சூத்து சந்த எலியே‘ மற்றும் ‘அநுராபுர‘ போன்ற பாடல்கள் முக்கிய இடம் பெற்றன. 1960ஆம் ஆண்டு லெஸ்டர் சம்ஸ் பீரிஸ் அவர்களுக்கு அவர் இரண்டாம் முறையாக இசையமைத்த திரைப்படமான ‘சந்தேஷய‘ வில் இடம்பெற்ற ‘பிருதுகீசிகாராயா‘ எனும் பாடலை எச்.ஆர்.ஜோதிபால அவர்கள் பாடினார். இப்பாடலின் துடிப்பான தாளம் அதன் பெரும் வெற்றிக்கு வெளியிட்டதோடு மாஸ்கோ வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. 1964ஆம் ஆண்டு ‘அம்பபாலி‘ எனும் திரைப்படத்திற்காக ராபியில் தென்னகோனால் எழுதப்பட்ட ‘திரிலோக நாத‘ எனும் பாடலை சுனில் அவர்கள் பாடியிருந்தார்.

மீண்டும் நிறுவப்பட்ட இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குனரான நெவில் ஜெயவீர அவர்கள் சுனில் ஷாந்த அவர்களை வானொலியில் அவரது இசை நிகழ்ச்சியான ‘மதுர மது‘விற்கு மீண்டும் திரும்பும்படி அழைப்புவிடுத்தார். அழைப்பையேற்ற சுனில் ஷாந்த அவர்கள் தனது இசைப்பயணத்தை 1967ஆம் ஆண்டு மீண்டும் தொடர்ந்தார். புதிதாக நிறுவப்பட்ட இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் ‘ஒலு பிபீலா‘வை தனது சிறந்த மாணவரான அய்வர் டென்னிஸுடன் இணைந்து பாடினார். H.W.ரூபசிங்க மற்றும் W.D.அமர்தேவ அவர்களின் உதவியுடன் சுனில் ஷாந்த அவர்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கான கலைஞர்களை தேர்ந்தெடுத்தார்.
‘ஏம்பா கங்க‘ மற்றும் ‘தெல் காலா ஹிஸ பீரன்ன நேனோ‘, போன்ற புரட்சிப்பாடல்களை உருவாக்கியது மட்டும் இன்றி இசைக்கருவிகளின் தங்கியிராது தனது குரலின் மேல் நம்பிக்கை கொண்டார். பின்னணியில் கோயில் மணியோசையை மட்டும் கொண்ட பாடலான ‘பொடா தஹம் சரணே‘ எனும் பாடல், உடக்கையை மட்டும் கொண்டு அமைக்கப்பட்ட ‘அம்பலமே பிணா‘ மற்றும் ‘டிகிரி லியா‘ எனும் பாடல்கள், மற்றும் எந்த இசையும் பயன்படுத்தப்படாத S.W.R.D.பண்டாரநாயக்கேவிற்கான நினைவுப்பாடல் போன்றவை சில உதாரணங்கள் ஆகும்.

1968ஆம் ஆண்டு சுனில் ஷாந்த அவர்களின் ‘சரசவி ஸ்டுடியோஸ்‘ இனால் பதிவுசெய்யப்பட்ட பாடல்கள் ‘சூரிய‘ லெபெலின் பெயரில் மீண்டும் பதிவுசெய்யப்பட்டது.

1969ஆம் ஆண்டு சுனில் ஷாந்த அவர்கள் முதன்முதலாக சிங்கள திரைப்படத்தில் இடம்பெற்ற ஆங்கிலப்பாடலை பாடினார். ஷெல்டன் பிரேமரத்னேவினால் இசையமைக்கப்பட்ட ‘மை ட்ரீம்ஸ் ஆர் ரோசெஸ்‘ எனும் இப்பாடலானது அருட்தந்தை மார்ஸளின் ஜெயக்கொடியினால் எழுதப்பட்டு G.D.L.பெரேராவின் ‘ரோமியோ ஜூலியட் கதாவாக்‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றது. அறிஞர்களின் மத்தியில் இடம்பெற்ற ‘சிகிரி பாடல்களில் ஆக்கப்பட்ட இசை உள்ளதா எனும் விவாதம் எழுந்த வேளையில், சுனில் ஷாந்த அவர்கள் ‘சசீகிரி குறுத்து கீ‘ யிலிருந்து சிகிரியா போன்ற கட்டடங்களை நிர்மானித்த நமது முன்னோர்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் பாடல்களை உருவாக்கினார். இவ்வாறாக 1977ஆம் ஆண்டு ‘சுனில் கீ‘ எனும் பதிவை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தினூடாக வெளியிட்டார்.
1970ஆம் ஆண்டு வீட்டு உரிமையாளரின் வேண்டுதலுக்கிணங்க சுனில் ஷாந்த மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அவ்வேளையில் அவரது காலமான மாமனாரின் மனைவியே அவர்களுக்கு உதவிக்கரம் அளித்து தனது வீட்டின் ஒரு பாகத்தில் சுனில் மற்றும் அவரது குடும்பத்தினரிற்கு தங்குமிடமளித்தார். கோழிக்கொட்டராம் சுத்தம் செய்யப்பட்டு கற்கும் அறையாக பாவிக்கப்பட்டது. அனைத்திற்கும் மத்தியில் தனது குழந்தைகள் சிறந்த கல்வியைப்பெற உறுதி கொண்டார். நான்கு மகன்மார்களும் பொறியியலாளர்களாகவும் மகள் கால்நடை மருத்துவராகவும் பட்டம் பெற்றனர்.
1981ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற அவரது இளையமகனின் அகால மரணத்தால் துயருற்ற அவர் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி மாரடைப்பினால் காலமானார். அவரது கண்கள் இருவருக்கு தானமளிக்கப்பட்டது.



சுனில் ஷாந்த வர்கள் சிறந்த இசைக்கலைஞரும் ஆசானும் மட்டுமின்றி அவரது குணங்கள், எளிமை மற்றும் அவரது கொள்கைகளில் என்றும் இணங்கி நின்றமைக்காக பலராலும் விரும்பப்பட்ட சிறந்ததொரு மனிதராவார். இன்றுவரை புகழடைந்திருக்கும், எளிமையான வரிகள் மற்றும் கனிந்த இசையென அதன் தன்மையுடன் அமைந்த சிங்கள பாடல்களுக்கு முன்னோடியாவார்.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி சுனில் ஷாந்த அவர்களின் 100ஆவது பிறந்த ஆண்டானது BMICH இல் ‘ஒலு பிபீலா‘ எனும் இசை நிகழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதோடு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி அவரின் பங்களிப்புகளைப்பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.


