கம்பீரமான என்றும் மறவா குரலைக்கொண்ட நன்கறியப்பட்ட பாடகரான சுனில் மாலவன ஒரு கிட்டாரிஸ்ட்டாக தனது பயணத்தை ஆரம்பித்தார். தலைசிறந்த இசைக்கலைஞர், மற்றும் சிங்கள பாப் இசையின் அரசனாக திகழ்ந்த கிளாரன்ஸ் விஜேவர்தனவின் முதலாவது இசைக்குழுவான ‘த மூன்ஸ்டோன்ஸ்‘ இன் மூலமே, அக்குழுவின் இளைய உறுப்பினராக சுனிலின் இசைப்பயணம் ஆரம்பமானது.
1968ஆம் ஆண்டு, மின் கிட்டார், ஒரு சித்தார், ஒரு சாக்ஸபோன், மற்றும் இரு வயலின்களைக்கொண்டு அவர்களது முதல் பதிவாக்கம் தயாரிக்கப்பட்டது.

கிளாரன்ஸ் விஜேவர்தன, மங்கள ரோட்ராகோ, சுனில் மற்றும் அஜித் சிவானந்தன் ஆகியோர் ஒரு மேளக்காரர் மற்றும் சித்தார் வாத்தியக்கலைஞர் உபாலி உபயசேகரவுடன் இணைந்து பாடினர். முதலாவது ஆல்பத்தின் சில புதிய தலைப்புக்கள் ஆவன: ‘மங்கோ நந்தா‘, ‘ருவன் புராய‘, சீதா யூதேயன்ட் சுது மனிக்கே‘. கிளிப் ரிச்சர்ட், ஜிம் ரீவ்ஸ் மற்றும் எல்விஸ் பிரஸ்லி ஆகியோரையும் தாண்டி இலங்கையின் சிங்கள பாப் இசையில் பெரும் இடத்தை பிடித்த பாடல் ‘மங்கோ நந்தா‘ ஆகும்.



மூன்ஸ்டோன்ஸ் குழு கலைக்கப்பட்டபின்னர் அதனைத்தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட, 70களில் பெரும் புகழ் பெற்ற ‘த சூப்பர் கோல்டன் சைம்ஸ்‘ குழுவில் இணைந்துகொண்டார். சுனில் பாஸ் கிட்டாரிஸ்ட்டாக விளங்கினார்.அனஸ்லி மாலவன (சுனிலின் அண்ணா), டிக்ஸன் குணரத்ன, ருக்ஷன் பெரெரா, போல் பெரெரா, சந்திரளால் பொன்சேகா மற்றும் நிமல் பெரேரா ஆகியோர் அக்குழுவின் மற்றைய பிரபல உறுப்பினர்கள் ஆவர்.
‘கமென் லியுமக்‘, ‘சந்தக் பசா கியா‘, ‘கதறகம‘, ‘உடரடனிலிய‘, ‘வன பம்பரோ‘, ‘சிஹின பதும்‘ மற்றும் பல பாடல்கள் பெரும் வெற்றிப்பாடல்களாகும். 70களின் பின் பெரும் முயற்சி கொண்ட குழுவான ‘த சூப்பர் கோல்டன் சைம்ஸ்‘ அவர்களது வெற்றிப்பாடல்களுக்காக மட்டுமின்றி முதன்மை வாய்ந்த நடனக்குழுவாகவும், கடந்த காலத்தில் கலை நிகழ்வுகளுக்கு பெரும் சனத்திரளை ஈர்க்கக்கூடிய குழுவாகவும் அறியப்பட்டது.



சுனிலின் முதலாவது சுயபாடலான ‘அபி தெதெனா‘, 2004ஆம் ஆண்டு ‘த சூப்பர் கோல்டன் சைம்ஸ்‘ இன் மீள் ஒன்றுகூடல் நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஒரு சிறு இடைவேளையின் பின், தலைப்புப்பாடல் பிரபல்யம் பெற்ற ‘மாலா‘ எனும் தலைப்புடைய பாடல் ஆல்ப தட்டச்சை வெளியிட்டு இசை பயணத்தில் மீண்டும் தடம் பதித்தார். சந்திரளால் பொன்சேகா, குமார் பீரிஸ் மற்றும் சுனில் பெரேரா ஆகியோர் ‘மாலா‘வை இசை அமைத்தனர். ‘மாலா‘ ஆனது மறைந்த கருணாரத்னே அபேசேகரவினால் எழுதப்பட்டு கிறிஸ்ட்டி டீ மெலால் பாடப்பட்ட ஒரு பாடலின் நவீன தழுவலாகும்.
பிரபல்ய பாடல் தட்டச்சான ‘பெம் திரிகோனே‘ இன் தலைப்பானது மில்ரோய் தர்மரத்னேயால் எழுதப்பட்டது. மற்றயை பிரபல்யமான ‘லதாவீமட முலையா‘ சுனில் பெரேராவால் எழுதப்பட்டது.



2008ஆம் ஆண்டு இசை ஆர்வலர்களிடையே உடனடி உட்சகத்தையீட்டிய ‘கடத் கடத்‘ எனும் பாடல் காணொளியை தயாரித்தார். சுனில் மாலவன, சிங்கள ரசிகர்களுக்கு ‘பிரவுன் ஆய்டு கேர்ள்‘ எனும் ஆங்கில தொகுப்பிற்கு அறிமுகம் செய்த்தார்.இது அவர்களிடையில் மிகப்பிரபல்யம் அடைந்தது. அவரது மெல்லிசைகள் அவரது உள்ளூர் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்து, அவர்கள் வாழ்வின் பல ஞாபகங்களுக்கும் எடுத்துச்செல்லக்கூடியவை.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘த சூப்பர் கோல்டன் சைம்ஸ்‘ இன் அசல் உறுப்பினர்கள், ‘கமென் லியுமக்‘, ‘சந்தக் பசா கியா‘, ‘கதறகம‘, ‘உடரடனிலிய‘, ‘வன பம்பரோ‘, ‘சிஹின பதும்‘ மற்றும் பல பாடல்களிலிருந்து அவர்களது ரசிகர்களின் மனதைத்தொட்ட பாடல்களை மீண்டும் வழங்கி மகிழ்விக்க மீள் ஒன்றுகூடல் நிகழ்விற்காக உலகமெங்கிலுமிருந்து வந்தனர்.



இன்று மாலவன அவர்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறையில் பிரபல்யம் பெற்ற மதிக்கத்தக்க வணிகராவார். நாட்டின் முதல் மூன்று சரக்கு பகிர்தல் நிறுவனங்களுள் ஒன்றின் நிர்வாக இயக்குனர் மற்றும் இலங்கை சரக்கு அனுப்புவோர் சங்கத்தின் தலைவராகவும் காணப்பட்டார். அவர் இசையில் ஈட்டுவதை நற்காரியத்திற்காக ஈடுபடும் தொண்டு நிறுவனங்களுக்களிக்கும் பெரும் கோடை வள்ளல் ஆவார்.



WRITTEN BY CHANDRIKA GADIEWASAM
EDITED BY NADEESHA PAULIS










Sooriya Golden Oldies










Moonstones Original Recordings 1967-75









