Sooriya Records Sooriya Records
Menu

ஸ்டான்சிலஸ் பெர்னாண்டோ

அங்கத்துவம் : Los Flamencos

இசைப்பிரிவு : Group Harmony

கொழும்பின் புறநகரான களனியின் சிங்காரமுல்லையில் மானுவேல் பிரான்சிஸ் ஜோசப் மற்றும் ஒலிவியா பெர்னிஸ் டீ சில்வா ஆகியோருக்கும் மகனாக பிறந்தார் ஸ்டான்சிலஸ். தனது ஆரம்ப கல்வியை புனித அலோசியஸ் கனிஷ்ட பாடசாலையில் கற்ற அவர் மேற்படிப்பை மொராட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியில் தொடர்ந்தார். ஆரம்பத்தில் தேவாலயங்காகளில் பாடிய பாடல்களில் ஆரம்பமான அவரது இசைப்பயணம் அந்த அனுபவத்தின் மூலமே விருத்தியும் அடைந்தது.

புனித அலோசியஸ் கனிஷ்ட பாடசாலையில் ஒரு இசைப் போட்டியில் வென்றதன் பின்னர் ஸ்டான்சிலஸின் கனவு ஒரு பாடகராக வேண்டும் என்பதே. இந்த புதிய இலக்கு அவரை அருட்தந்தை டொமினிக் கண்டப்பாவிடம் இசையை தேடிச்சென்று கற்க வைத்தது. தன்னுடைய உயர்கல்வியை முடித்த பின்னர் தன்னுடைய பாடசாலை நண்பனான துலீப் டி சில்வாவுடன் இணைந்து லத்தீன் அமெரிக்க, ஸ்பானிய பாடல்களை பயிற்சி செய்தார். அதுவே பின்னர் அவர்கள் தங்களுடைய சொந்த ஊரான மொராட்டுவை நண்பர்களுடன் இணைந்து ஒரு இசைக்குழுவை உருவாக்கி அதற்கு “Los Flamencos”என்று பெயரிட அடிப்படை காரணமாகியது.

அறிமுகம்

அவர்கள் அதிகமான பாடல்களை எழுதி இசையமைத்திருந்தாலும் 1967ல் “Los Flamencos”யின் முதல் மேடை நிகழ்ச்சியில் பாடிய “களு கெல்லே”இன்றுவரை மக்களிடம் அதிகம் பிரசித்தி பெற்றது எனலாம். இந்த குழுவினுடைய முதல் பாடலுக்கான வாய்ப்பு கௌரி நிறுவனத்தினால் பிலிப்ஸ் லேபிளின் கீழ் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

ஸ்டாசின்சிலஸ் கோட்டை சிறுவர் புத்தக நிலையத்துக்கு அருகிலுள்ள க்ரின்ட்லே வங்கியில் பணியாற்றி வந்தார். அங்கே வேலை செய்யும் காலத்திலேயே கலைஞர்கள் அதிகமாக வந்து போகும் அந்த புத்தக நிலையத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த பழக்கமே இவருக்கு பிரபல பாடகரான இந்திராணி மற்றும் ஜெரால்ட்டின் மகனான நேதாஜியின் நட்பை உருவாக்கியது. சூர்யாவின் அடுத்த 3 ஒளிப்பதிவுகளுக்காக இந்த குழுவே தெரிவு செய்யப்பட்டட்து.

Los Flamencos photo shoot for Sooriya album cover: ‘Los Famencos On The Move’ – 1969 L to R: Nihal, Delricus, Stanislaus, Duleep, George

பயணம்

இவர்களுடைய குழு பிரபல ஹோட்டல்களில் தங்களின் நிகழ்ச்சிகளை செய்து வந்தது. தங்களுடைய சுயாதீன பாடல்களோடு மட்டும் நின்றுவவிடாது ஏனைய மொழி பாடல்களையும் இவர்கள் அதிகம் பாடினார்கள் அதிலும் ஸ்பானிய மற்றும் ஸ்வாஹிலி மொழிகளில் அதிக பாடல்கள் அமைந்திருந்தன. இவர்களுடைய ஸ்பானிய பாடல்கள் அத்தனை உயிரோட்டமாக இருந்தது. ஒருமுறை இவர்கள் பிரவுன்ஸ் கடற்கரை ஹோட்டலில் நிகழ்ச்சியை செய்து கொண்டிருக்கும்போது ஒரு வெளிநாட்டு பெண்மணி இந்த பாடகர்கள் உண்மையாகவே ஸ்பானிய மொழியை பேசுகிறவர்கள்தான் என தன்னுடைய நண்பருடன் பந்தயம் கட்டியிருந்தாள். அவ்வளவு துல்லியமான மொழிநடை அவர்களுக்கு அமைந்திருந்தது.

 

ஸ்டான்சிலசுக்கு அவருடைய வங்கியில் இருந்து தேவையான ஊக்கமும் ஆதரவும் கிடைத்தது.பின்னர் அவர் செலான் வங்கியில் வேலையை தொடர்ந்தபோதும் அந்த ஆதரவுக்கு குறைவில்லை. அவருடைய நேர்காணல்களில் தன்னுடைய வேலை நேரங்களில் இருந்து எவ்வாறு தன்னுடைய நிகழ்ச்சி நாட்களில் அவர் வெளியேற அனுமதி கிடைத்தது என்பது பற்றியும் ஒவ்வொருநாளும் வேலை முடிந்த பின்னரான அலுவலக பயிற்சிகள் பற்றியும் அதிகம் பகிர்ந்துள்ளார்.

ஸ்டான்சிலசுக்கு 3 சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள். அண்டன், மில்ரோய், மோகன். மற்றும் மார்க்கிரட், கோனி மற்றும் மொய்ரா. தன்னுடைய வாழ்க்கை துணையாக ஸ்ரியானியை தேர்வு செய்த இவர் சுலோசனி, ஷிவந்தா ஆகியோரின் அன்பு தந்தையானார்.

Married to Sriyani, he is a beloved father of two children Sulochani and Shivantha.

இவருடைய இசைப்பயணம் இசைக்குக்குழுவின் சிலர் வெளிநாடு சென்ற காரணத்தால் 1978இன் பின்னர் தொடரவில்லை. இருந்தபோதும் இசைமீதான இவரது காதல் அப்படியேதான் இருந்தது. 1980ல் இவரும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமானார். அதன் பின்னராக1994ல் இலங்கை திரும்பிய ஸ்டான்சிலஸ் செலான் வங்கியில் இணைந்து வாஸ்க்கையை தொடர்ந்தார். இன்று தன்னுடைய அன்பு மனைவியால் மொராட்டுவையில் நடாத்த படுகிற பாலர் பாடசாலையோடு தன்னுடைய வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

Stanislaus (standing right) with the management team at Seylan Merchant Bank, 1994

ALBUMS

Silky Caressing Voices Los Flamencos
The Sooriya Show : Vol 2
Los Flamencos
The Los Flamencos on the move
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!