ஷிரோமி, ஸ்டான்லி மற்றும் சுவீட்டி பெர்னாண்டோவின் ஒரே குழந்தை ஆவார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த ஷிரோமி, தனது அன்பார்ந்த தாய், பாட்டி ஸ்டெல்லா மற்றும் காலப்போக்கில் ‘தர்மரத்னே பிரோதெரஸ் என அழைக்கப்பட்ட தாயின் நான்கு சகோதரர்களான கிறிஸ்டி, மேக்ஸ்வெல், மில்ரோய், மற்றும் ரொனால்டுடன் வளர்ந்து வந்தார். இசைக்குடும்பத்தில் வளர்ந்துவந்ததால் இவருக்கு பாடல் மற்றும் ஆடலில் ஆர்வவும் திறனும் சிறுவயதிலேயே ஏற்பட்டது.
ஷிரோமி கொழும்பில் பிறந்து, கொட்டாஞ்சேனை நல்லாயன் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார்.
ஷிரோமி கொழும்பில் பிறந்து, கொட்டாஞ்சேனை நல்லாயன் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். ‘லே சிலோனியன்ஸ்‘ஐ சார்ந்த நோயேல் ரணசிங்க மற்றும் மேக்ஸ்வெல் தர்மரத்தின சேர்ந்து நடாத்திய, கொழும்பு புனித பிரிட்ஜெட் கல்லூரியில் நடைபெற்ற ‘ஆசிரி குசும்‘ எனும் நிகழ்விலேயே ஆறே வயதான ஷிரோமி முதன்முதலாக ஒரு மக்கள் சபையில் பாடகியாக அரங்கேறினார். இந்தநிகழ்வில் பல சிங்கள இணைஇசைக்குழுக்கள் பங்குகொண்டபோதிலும், தனிக்கலைஞராக மேடை ஏறியவர் குழந்தை ஷிரோமி மட்டுமே. ஒலிவாங்கியை எட்டுவதற்கு படி தேவைப்படுமளவிற்கு சிறுமியாக இருந்தார்.

ஷிரோமியின் இயற்கையான திறனை கண்டறிந்த அவரது தாய், பாட்டி மற்றும் மாமனார் மில்ரோய், அவரது ஒரு பாடலையாவது பதிவிட முயட்சித்த போதிலும், அவை பயனற்றுப்போயின.
பிலிப்ஸின் முகவரான கௌரி கூட்டுத்தாபனத்தின் அதிபர் பற்றிக் கொரேராவை மில்றோய் தொடர்பு கொண்டார். குரலை பரிசோதிக்க அவர் ஷிரோமியை தழுகம சரஸ்வதி ஸ்டூடியோவின் இசையமைப்பாளரான ஆர்.ஏ.சந்திரசேன அவர்களிடம் அழைத்துச்சென்றார். பற்றிக் கோரேரா மற்றும் சந்திரசேன ஆகிய இருவரு ஷிரோமியின் திறமையை அங்கீகரித்த போதிலும், ஒரு இசை பதிவிடக்கூடிய கலைஞராவதற்கு மேலும் அனுபவம் தேவை எனக்கருத்தினார்கள். அதன் பின் மில்ரோய் ஷிரோமியை ‘சூரிய‘ லபேலின் ஜெரால்ட் விக்ரமசூரியவிடம் அழைத்துச்சென்றபோதிலும் அவரும் அவ்வேளையில் அக்குரலில் பதிவிட முழுமையாக சம்மதம் தெரிவிக்கவில்லை.
அறிமுகம்
1970ஆம் ஆண்டு எல்மோ பெர்னாண்டோ எனும் இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளர்/ நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஷிரோமியின் தாயாரிடம், ஷிரோமியின் விண்ணப்பத்தை ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்குமாறு கூறுகிறார். அதனூடாக ஷிரோமிக்கு லேம்பெர்ட் பெம்மாவாடுவால் தொகுத்தளிக்கப்பட்ட ‘ஹந்த மாமா‘ எனும் நிகழ்ச்சியில் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது.



அவ்விடத்தில்தான் ஷிரோமி ‘கொண்ட நமாகென‘ எனும் பாடல் பாடி தனது முதல் பதிவை மேற்கொண்டார்.அப்பாடல் பெரும் வெற்றிபெற்று, சில வாரங்களிலேயே பல சிறுவர் நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றது. தொடர்ந்து இப்பாடல் ‘கீத தகர‘ எனும் சிங்கள இசையில் புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1971ஆம் ஆண்டு ஷிரோமியின் திறமை மற்றும் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்ட ஜெரால்ட், அவரை ‘சூரிய‘ லெபெலின் பெயரில் பாடல் பதிவிட அழைப்பு விடுத்தார். அவரது முதல் ஆல்பம் ஆன ‘கொண்ட நமாகென‘, ‘கொண்ட நமாகென‘, ‘அம்மா‘, ‘சகல பூஜாங்‘, ‘ஹந்த ஹாமி‘ ஆகிய நான்கு பாடல்களை உள்ளடக்கியது. வெளிவந்த நான்கைந்து மாதங்களிலேயே 5000கும் மேற்பட்ட நீட்டிக்கப்பட்ட நாடக பதிவேடுகள் விற்கப்பட்டு, இலங்கை இசை உலகில் பெரும் நட்சத்திரமாக காணப்பட்டார்.






வழிப்பயணம்
ஷிரோமி ‘சூரிய‘ லெபெல் பெயரின்கீழ், 1971ஆம் ஆண்டு ‘பேபி ஷிரோமி டஸ் இட் அகேயின்‘ மற்றும் 1973ஆம் ஆண்டு ‘மீட் ஷிரோமி – குவைட் அ லேடி நவ்‘ எனும் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. இப்பாடல்கள் அனைத்திற்குமான பாடல்வரிகள், மெல்லிசை மற்றும் இசையமைப்பானது அவரது மாமனார் மில்ரோய் தர்மரத்னேவினால் ஆக்கப்பட்டது.மீண்டும் ‘சூரிய‘ லெபெலின் பெயரினால் வெளியிடப்பட்ட ‘தர்மரத்னே பிரதர்ஸின் ஆல்பத்தில் இடம்பெற்ற ‘பொருவட்ட அண்ட அண்ட ‘ எனும் பாடலை அவரது மாமனார் மக்ஸ்வெல்லுடல் இணைந்து பாடியிருந்தார்.






இக்காலகட்டத்தில் ‘பேபி ஷிரோமி‘ ஆக பிரபல்யம் அடைந்த இவர் இலங்கை முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் உள்ள கச்சேரி அரங்கங்களிலும் பாடி இளைஞர்களும் சிங்கள பாப் பாடல் அரங்கில் தடம் பதிக்கும் போக்கை உருவாக்கினார்.
பிரபல்யமான ‘சூரிய‘ நேரடி நிகழ்வுகளிலும், ‘சூரிய‘ வானொலி நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பங்கு கொண்டார்.



‘பலன பலன காலே‘, ‘ராஜகம‘, ‘ சூது அக்கே‘, ‘ டியர் சுவீட்டி‘ ஆகிய நான்கு பாடல்களை ‘நியூ சவுண்ட்‘ லெபெலின் கீழும், ‘ஜேசு பபா‘, ‘அதீதயை‘, கித்த பணத்த‘ மற்றும் ‘மாமா‘ஆகிய நான்கு பாடல்களை ‘ஸ்டெல்லா‘ ளேபேலின் கீழும் பதிவிட்டார். என். ஷண்முகலிங்கத்தினால் எழுதப்பட்ட ‘மாமா‘ எனும் பாடலே அவர் முதன்முதலாக பதிவிட்ட தமிழ் பாடலாகும்.
சில்வர் லைன் லெபெலின் முதலாவது நீட்டிக்கப்பட்டநாடக பதிவேட்டில் ஷிரோமியின் ‘மங் சமணலையேக் வேலா‘ மற்றும் ‘அண்டன்ன எப்பா‘ ஆகிய இரண்டு பாடல்களும், மில்டன் மல்லவாராச்சியின் இரண்டு பாடல்களும் இடம்பெற்றன.
லுகேமியா எனும் நோயால் இறந்த ஷிரோமியின் நண்பிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘அண்டன்ன எப்பா‘ எனும் பாடல் மில்ரோய் அவர்களால் எழுதப்பட்டது.இப்பாடல் வரிகளானது தனது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு பெண் தன் தாயிடம் கண்ணீர் விடக்கூடாது என வேண்டிக்கொள்ளும் விதமாக அமையப்பெற்றது. ஷிரோமி தான் கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என எண்ணி அவரது இல்லமே கண்ணீருடன் வந்த ரசிகர்கள் கூட்டத்தில் நிறைந்தது.



புனித பெனடிக்ட் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த களிவிழாவில் தனது ஆடலை ஷிரோமி அரங்கேற்றி வெற்றிபெற்றபோது அவர் திறமையை கண்டு வியந்த புகழ் பெற்ற திரை நடன இயக்குனர் ஷிரோமியை திரைப்பட தயாரிப்பாளரான ரஜாப் அலியிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஷிரோமியின் முதல் திரைப்படமானது ராபின் தம்போவின் ‘மஹாதேன முத்த‘ ஆகும்.அவரது இரண்டாவது திரைப்படம் லெனின் மோரியாஸ் மற்றும் ராஜா பலியின் ‘சூது துவ‘ ஆகும். மூன்றாவது படமானது வின்சென்ட் டேவிட் மற்றும் அன்றூ முத்தையாவின் எஸ்.பீ. எம் ஸ்டூடியோ வெளியிட்ட, ஷிரோமி ஒரு ஐந்து வயது சிறுவனாக நடித்த ‘பஞ்ச‘ ஆகும்.
ஷிரோமி மூன்று திரைப்படங்களிலும் பாடியுள்ளார்: ஜே.செல்வரத்தினத்தின் ‘ஹொந்தட்ட ஹொந்தை‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற கே.ரொக்சாமியின் இசையிலான ‘மாமே கியன்ன கோ‘ எனும் பாடல், மற்றும் தன் கதாப்பாத்திரமாகவே நடித்த னியில் ரூபசிங்கவின் ‘ஆதார ஹிதனாவ தக்காம‘ எனும் திரைப்படத்தில் பீ .எல்.ஏ.சோமபாலாவின் இசையமைப்பில் இடம்பெற்ற ‘ஆகாசே ராஸ் விகித‘ எனும் பாடல் மற்றும் எச்.டீ.பிரேமரத்தனேவின் ‘சிகுருளிய‘ எனும் திரைப்படத்தில் கிளாரன்ஸ் விஜேயவர்தனவின் இசையில் இடம்பெற்ற ‘லிலாந்தி கருணாநாயக்கவுடன் இணைந்து பாடிய ‘ஹிமா கண்டே மனமாலி‘ எனும் பாடல்.









கல்லூரிக்காலங்களிலிருந்தே கல்கிசையில் வசிக்கும் சுனில் வெளிகளை என்பவர் ‘குழந்தை‘ ஷாலினியின் பெரும் ரசிகர். அவர் ஷிரோமியை காண முயட்சித்து இறுதியாக அவரது வீட்டில் சந்தித்தார். இவர் ‘ஷிரோமியின் ரசிகர் மன்றம்‘ எனும் பெயரில் ரசிகர் மன்றம் ஒன்றை ஆரம்பிக்கும் யோசனையை முன்கொண்டார்.
காலப்போக்கில் சுனில் ஷிரோமியிடம் தன் காதலை தெரிவித்தபோது ஷிரோமியின் மாமனார்களின் ஆதரவுடன் ஷிரோமியை திருமணம் செய்து கொண்டார். 1987ஆம் ஆண்டு இருவரும் தமது மகன் மற்றும் மகளுடன் கனடாவிற்கு குடிபெயர்ந்தனர். கனடாவில் அமைந்துள்ள ‘நியூபரோ மாண்டிசோரி கல்லூரியில்‘ பயின்று பட்டம் பெற்ற ஷிரோமி ‘கென்னடி மொண்டேசொரி‘ தனியார் பாலர் பாடசாலையில் ஆசிரியையாக கடமை ஆற்றி பாலர்களுடன் தனது நேரத்தை மகிழ்வாக கழித்தார்.












2003ஆம் ஆண்டு ஷிரோமி தன கணவரை புற்றுநோய்க்கு பறிகொடுத்தார். தற்சமயம் மார்க்கம், ஒண்டாரியோ, கனடாவில் வசித்து வருகிறார்.
2008ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் திகதி, மருதானை, எலிபின்ஸ்டன் அரங்கில் இடம்பெற்ற தர்மரத்னே பிரோதெரஸ்ஸின் 40ஆண்டுகள் இசைப்பயண விழாவில் ஷிரோமி மீண்டும் மேடையில் தோன்றினார். அந்நிகழ்வின் போது ஷிரோமியுடன் அவரது மகள் ஹசனியும் மக்ஸ்வெல்லின் மகள் நெலுமும் இணைந்துகொண்டனர்.
இலங்கையில் ஷிரோமியின் பாடல்கள் என்றும் பசுமையான சிறுவர் பாடல்களாக திகழ்ந்துகொண்டே இருக்கும். மற்றும் ஒரு ‘குழந்தை நட்சத்திர மேதை‘ எனும் பட்டத்திற்கு அவரே உரித்தானவர் ஆவார்.


















Konda Namaagena












Shiromi Does It Again











