ஓர்கன் வாத்தியக்கலைஞரின் பேரனாக ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்த பிரியவின் இசைக்கான முதல்படி அவரது ஏழாவது வயதில் அவர் தந்தையால் பரிசளிக்கப்பட்ட ஹார்மோனிக்கவுடன் ஆரம்பமானது. புனித பரிதோமாவின் கல்லூரியில் கல்வி பயின்று வந்த இவர், பாடசாலை விடுமுறை நாட்களில் மலையகத்தில் இருக்கும் அவரது பெற்றோர்களின் பெருந்தோட்டத்திற்கு செல்லும் வேளையில் ஹார்மோனிக்க வாசிப்பதுண்டு.
கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் தன் உள்ளுணர்வின் மூலம் தன்னிச்சையாக கற்றுக்கொண்ட பாடல்களை பிரிய ஹார்மோனிக்காவில் வாசிப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அவரை பாராட்டுவதுண்டு.
இசைமேல் கொண்ட ஆர்வத்தினால், தனது பாடசாலை இசைக்குழுவினர்களின் இசையாகங்களை நன்றாக கிரகித்து வந்தார் பிரிய. இந்தப்பழக்கமே அவரை சிறு வயதிலேயே இசை இணையாக்கத்தில் முதன்மையுற வாய்ப்பளித்தது.
அறிமுகம்
முதன்முதலாக ‘மலிபன் திறமைகாண் போட்டி‘யில் (பொதுவாக ‘மலிபன் குவான் தொட்டில்ல‘ என்று அறியப்படும்) பங்கேற்கயில் பிரியவின் வயது பதினெட்டு மட்டுமே. அவர் அன்று “சண்டே மோர்னிங்ஸ்” எனப்படும் நெட் மில்லரின் ‘ஹில்லபில்லி‘ பாடல் ஒன்றைப்படினார். பிரிய இந்த போட்டியில் கலந்துகொள்ள காரணமாக இருந்தது, அவரது திறைமையை முன்கூட்டியே அறியக்கண்ட அவரது மாமனார் பிரையன் பெர்னான்டோ ஆவார்.
1966ஆம் ஆண்டு பிரையன் பெர்னான்டோ, பிரிய மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து ‘லா பாம்பாஸ்‘ எனும் இசைக்குழுவை அமைத்து ‘ஆப்செர்வேர் திறமைகாண்‘ போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், பல விடுதிகளிலும் பாடி வந்தனர். இதன்மூலம் 1968ஆம் ஆண்டு அவர்களது பாடல் முதல் முதலாக பதிவு செய்யப்பட்டது.

வழிப்பயணம்
சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே வெற்றிப்பாடல்கள் அளித்த அறிய இசையமைப்பாளர்களில் பிரியவும் ஒருவராக திகழ்ந்தார்.
‘சூரிய‘ பெயரில் வெளியிடப்பட்ட ‘ல பாம்பாஸ்‘ ஆல்பம் பாடல்களான ‘நுவர மனிக்கேலா‘ மற்றும் ‘கொக்–அ–டூடல்–டூ‘ போன்ற பாடல்களை இசையமைக்கும்போது அவரது வயது பத்தொன்பதே ஆகும். பிரியவினால் இசையமைக்கப்பட்ட ‘குறுள்ளான் பியாபலா‘ எனும் பாடல் உடனடி வெற்றியளித்து, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு சிங்களப்பாடல் வரிசையில் தொடர் முதலாம் இடத்தை வகித்து வந்தது.
இவர் ‘லா பாம்பாஸ்‘ இன் நான்காம் அல்பத்திற்காக பதிவு செய்யப்பட்ட ‘வெல்கம் டு சன்னி லங்கா‘ மற்றும் ‘ஆயுபோவன்‘ போன்ற தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களையும், ‘வெய்க் அப் இன் ஸ்ரீ லங்கா போர் அ நைஸ் ஹாட் காப் ஒப் டீ‘ போன்ற இலங்கை தேயிலைத்தொழிலிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களையும் இசையமைத்துள்ளார். இருப்பினும் இப்பாடல்கள் இலங்கை சுற்றுலாத்துறையினாலோ, இலங்கை தேயிலை சபையினாலோ எப்பொழுதும் அங்கீகரிக்கப்படவில்லை.

மற்றவரின் திறமையை கண்டறியும் அவரது ஆற்றலினால் பிரிய மேலும் பலரை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். பால் பெர்னாண்டோ முதல் விஜய கொரியா வரை இவராலேயே அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். பாலின் முதல் இசை நிகழ்ச்சிக்கு எவரும் பின்னணி இசை வழங்க முன்வராத பொழுது பிரியவின் ‘லா பம்பாஸ்‘ குழுவே இசைப்பின்னணி அளித்தது. பிரியவின் இசையமைப்பில் வெளிவந்த பாடல்களான ‘மால‘ மற்றும் ‘பண் மம‘ போன்றவை பாலிற்கு ‘பைலாவின் இளவரசன்‘ எனும் பெரும் புகழளித்த பாடல்களாகும்.பிரிய பாலை ஜெரால்டுற்கு பாடல் பதிவுகளிற்காக அறிமுகப்படுத்தினார். ஸ்டான்லி பீரிஸ் மற்றும் போர்ச்சூன்ஸ் இசைக்குழுவினரை விஜய கொரியாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் பிரியவே. இதன்மூலம் அவர்கள் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் ‘சூரிய‘ பெயரிலும் பாடல் பதிவிட வாய்ப்பைப்பெற்றார்கள்.
அக்காலகட்டத்தில், பிரிய தேயிலைத்தொழிற்துறையிலும், இறப்பர் தொழிற்துறையிலும் பணி புரிந்து வந்தார். ‘ Summerville & Co ‘ எனப்படும் தேயிலை நிறுவனம் கோட்டையில் சிறுவர் நூல்நிலையத்திற்கு எதிராக அமைந்திருந்தது. பாடல்கள் கேட்பத்திற்காக அடிக்கடி பாடல் பதிவேட்டுக்கடைகளுக்கு தன் நண்பர்களுடன் சென்று வரும் நாட்களையும், அங்கு சக இசைக்கலைஞர்களை ரசிகர்களையும் சந்தித்து வந்த நாட்களையும் பிரிய நினைவுகூருகிறார்.

இராணுவ இசைக்கலைஞர்களுக்காக ‘லா பம்பாஸ்‘ இசைக்குழுவின் உதவியுடன் அவர் தொடர்ச்சியான இசைப்பட்டறைகளை ஆரம்பித்தார். பிரியாவின் முயற்ச்சி அனைத்தும் அவர் இசைமேல் கொண்ட பேரார்வத்திற்க்கானதும், இலங்கை இசைத்துறைக்கான சேவையாகும்.
இவரே 1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘மொறட்டுவை கலை மன்றத்தின் நிறுவனர் அவார்.
2014ஆம் ஆண்டு பிரியாவிற்கு, அவர் இலங்கை இசைத்துறையின் வளர்ச்சிக்கு அளித்த சேவையை பாராட்டி இலங்கையின் தேசிய விருதான ‘கலாபூஷண‘ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் 2014ஆம் ஆண்டின் தேசிய மாநில இலக்கிய கலை விழாவின் வெற்றியாளருக்கான விருதும் இவருக்கே வழங்கப்பட்டது..

பல்துறை இசைக்கலைஞரான இவர் உலகளாவிய இசை மற்றும் அதன் தோற்றம் பற்றிய அறிவில் தேர்ந்தவர் ஆவார். இவற்றுள் ஆங்கிலம், ஸ்காட்டிஷ், வெல்ஷ், ஐரிஷ், பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பனீஸ், ஹவாய், லத்தீன் அமெரிக்கன், நம்பகமான கரீபியன் க்யூப்சிப்ஸோஸ், அமெரிக்கன் கவ்பாய், ‘Plantation and Dixieland favorites’, நீக்ரோ ஆன்மீகம் போன்றவை குறிப்பிடத்தக்கன.

சில வேளைகளில் ‘லா பம்பாஸ்‘ குழுவுடன் ஒன்று கூட முடியாத பொழுதிலும், அக்காலகட்டத்தின் ஞாபகங்களை மீட்டுவதற்காக பிரிய தனியாக மேடைகளில் முன்வருவதுண்டு.

Sooriya Show Vol III
