மக்களின் பொழுதுபோக்கு நேரடி கச்சேரிகளையே தங்கி இருந்த காலத்தில் வானொலியின் ஆரம்பம் மக்களுக்கு இசையை கேட்டு மகிழ பல வழிகளை அமைத்து கொடுத்தத்து.அக்காலத்தில் நிச்சயமாக அனைவருக்கும் வானொலி கேட்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும் வாய்ப்பை பெற்றவர்கள் இதனை மிகவும் விரும்பினர். மாலை நேர நிகழ்ச்சிகளை கேட்பதற்காக ஊரில் உள்ள அனைவரும் வானொலி உள்ள வீடுகளில் கூடுவர்.ஆரம்ப கால பிரபலங்களான அல்விஸ் பிரஸ்லி அல்லது கிளிப் ரிச்சர்ட் போன்றோரின் இசையை மட்டுமே வானொலியில் கேட்க கூடியதாக இருந்தது.விரைவில் தேசிய கலைஞர்களுக்கும் அவர்களுடய இடங்களை பிடித்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இதற்க்கு காரணமாக இருந்தவர் பேட்ரிக் கோரேராவே ஆகும்.
இவரது முயற்சிகளால் 1960களில் EP பதிவுகளின் தயாரிப்புகளின் மூலம் நம் தேசிய கலைஞர்களுக்கும் தமது நாமங்களை இசை துறையில் அமைத்துக்கொள்ள வழியமைத்துக் கொடுத்தார்.
ஜோசப் வின்சென்ட் பேட்ரிக் கோரேரா 1945ல் இந்திய பெற்றோருக்கு பிறந்தார். இவரது தந்தை ஜோசப் அன்டனி சேவியர் கோரேராவின் பின் பதிவு தட்டுகள் இறக்குமதி வியாபாரத்தையும் குடும்பத்தையும் இவர் பொறுப்பெடுத்தார். 1966ல் ஜோசப் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ள வியாபார நகரமான புறக்கோட்டை பகுதியில் உள்ள டம் வீதியில் உள்ள கௌரி கோப்பரேஷன் எனும் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விலைக்கு வாங்கினார்.பிலிப்ஸ் பதிவு தட்டுகளை இலங்கைக்கு கொண்டு வரும் உரிமையை கௌரி நிறுவனமே கொண்டிருந்தது.21 வயது பூர்த்தி அடைந்ததுமே பேட்ரிக் தந்தையுடன் இணைந்து வியாபாரத்தை நடத்தி வந்தார். தந்தையும் மகனும் சேர்ந்து தமிழ் ஹிந்தி மற்றும் ஆங்கில பாடல் பதிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தனர். பின்னர் இவர் கௌரி நிறுவனத்தின் முகாமையாளர் ஆனார்.

பின்னர் சிங்கள EP பதிவுகளை இவரே தயாரித்தார். பிலிப்ஸ் பதிவுகள் சிறுவர் புத்தக சாலைகளிலும் விற்கப்பட்டது.பின்னர் இவர்களின் சொந்த நிறுவனமான ‘சூரிய’ ஆரம்பிக்கப்பட்டது.
இவரது பள்ளிப்பருவத்தில் பட்ரிக் ரேமண்ட் பொன்செகா, ரோய் பொன்சேகா, நிஹால் சில்வா ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார்.இவர்கள் அனைவரும் கொண்டிருந்த இசையின் மீதான அன்பே இவர்களின் நட்புக்கு காரணமாக இருந்தது.பிலிப்ஸ்இன் முதலாவது குழு பதிவு இவர்களாலேயே செய்யப்பட்டது.ரேமண்ட், ரோய், நிஹால் மூவரும் இணைந்து சமனலயோ இசைக்குழுவை அமைத்தனர். இதுவே முதன்முதலாக சிங்கள பெயர் கொண்டு அமைக்கப்பட்ட முதலாவது இசைக்குழுவாகும்.1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் லெவிஸ் பிரவுனின் பதிவு நிலையத்தில் “நெலவென மவ் உகுலே”, “பத்தேமி ஒருவே”, “நெடும் குருவரி”, “ஹந்த எளியே” ஆகிய பாடல்களை பதிவு செய்தனர்.டொனி பெர்னாண்டோவால் இப்பதிவுகள் செய்யப்பட்டன.இதுவே பிலிப்ஸ் குழுவினரின் முதலாவது EP பதிவாகும். இது JVPC 1001 என பெயரிடப்பட்டது. ஜ்வபிக் என்பது தயாரிப்பாளரின் பெயரை குறித்தது (ஜோசப் வின்சென்ட் பட்ரிக் கொரேரா).
சமணலையோ குழுவினரின் முதலாவது EP பதிவானது இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் அப்போதைய பணிப்பாளராக ர். R.விஜேமான்னாவுக்கு பரிசளிக்கப்பட்டதுடன் கட்டணமின்றி அவர்களது வானொலியில் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டது.
நோயல் ரணசிங்ஹவின் அழைப்பில் பட்ரிக் St. Bridgets’ கான்வென்ட் இல் நடத்தப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பொது வளர்ந்துவரும் இசைக்குழுக்களான லா சிலோனியன்ஸ், த மூன் ஸ்டோன்ஸ், த தர்மரத்ன ப்ரதர்ஸ், மீமெஸ்ஸோ, லா பம்பாஸ், த ஹம்மிங் பர்ட் ஆகியோரை சந்தித்தார்.பட்ரிக் தர்மரத்ன ப்ரதர்ஸ் மூலம் இந்நிகழ்ச்சியை பதிவு செய்ய அனுமதி பெற்றார்.
1968ம் ஆண்டு இவர் JVPC 1002, 1003 ஆகிய EP பதிவுகளை லா சிலோனியன்ஸ்க்காக நோயல் ரணசிங்ஹவின் தலைமையில் பதிவு செய்தார்.அப்போது மில்டன் பல்லவாரச்சியும் இசைக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.பின்பு இவர் மில்டனுக்காக இவரது முதலாவது தனி EP பதிவான JVPC 1052ஐ தயாரித்தார்.இப்பதிவானது கருணாரத்ன அபேசேகரவால் பாடல் வரிகள் எழுதப்பட்டு மொஹமட் சலியால் இசையமைக்கப்பட்ட “ஒருவக் பாவென்”, “ரண்கூடுவ ஒப சது”, “சன்சார செவநெல்ல” ஆகிய பாடல்களை கொண்டிருந்தது.

இலங்கையின் இசைக்குழுக்கள் நம் நாட்டில் மட்டும் இன்றி நம் தேசத்தவர்கள் வாழும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பிரபல்யமடைவதற்கு இவர் பெரும் பலமாக இருந்தார்.
விக்டர் ரத்னாயகே, M .S .பெர்னாண்டோ, H. R. ஜோதிபால,அன்டன் ரொட்ரிகோ ஆகியோர் பட்ரிகின் EP பதிவுகளுக்காக பாடினார்.இவர் கிட்டதட்ட 100 EP பதிவுகளை தயாரித்து இசை துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
1970களில் இவரது உடல் சுகவீனத்தால் இவரது வியாபாரம் வீழ்ச்சியடைந்தது. 1980களில் மறுபடியும் இவர் வியாபாரத்தை ஆரம்பித்த போது ‘கருப்பு ஜூலை’ கலகக்காரர்களின் கையில் சிக்கியது.இவரது குடும்பம் வீட்டை இழந்து இவரது வியாபாரமும் இனக்கலவரத்தால் சாம்பலாகியது. இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பட்ரிக் மீண்டும் இசைத்துறைக்கு திரும்பவே இல்லை. இவர் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி காலமானார்.
பட்ரிக் என்றுமே பணத்தின் பின்னும் பெருமையின் பின்னும் செல்லாத கலைநயம் கொண்ட இதயத்துடன் பெரிய உதவிகரங்களை கொண்டவர் என மில்ரோய் தர்மரத்ன தனது சொந்த வரிகளில் கூறியுள்ளார்.