Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

நீலா விகிரமசிங்க

இசை பிரிவு : Film, Sinhala Light Classical

அவருக்கு அந்த குரல் இயற்கையாகவே அமைந்திருந்தது, கேட்பவர்களின் மனதை இதமாக்கி அவரது பாடலை தொடர்ந்து கேட்க செய்யும் அந்த மாயம் அவரிடமே வாய்த்திருந்தது. ஒவ்வொரு பாடலிலும் அதனுடைய உண்மையான உணர்வுகளை வெளிக்கொணரும் அந்த வித்தையை அழகாக இசையுடன் இணைத்து ரசிகர்களுக்கு கொடுக்கும் அந்த உன்னத பாடகி வேறு யாருமல்ல, விஷாரத நீலா விக்ரமசிங்க.

கஸ்பாவ அரச தனியார் பாடாசாலையில் கல்வி கற்கும்போதே அவர் முதல்முதலில் இசைத்துறையில் ஈடுபட ஆரம்பித்தார். அவர் சிறுவயதிலேயே இசை ஜாம்பவான்களான மேஸ்ட்ரோ வின்சன்ட் சோமபால, ஆனந்த ஜயசிங்க, அமரா அத்துகோரள, சரத் தசநாயக்க மற்றும் பிரேமதாச முதுன்கொட்டுவ ஆகியோரிடம் தனது ஆரம்ப இசைக்கல்வியை கற்கும் வாய்ப்பினை பெற்றார். 1959ல் நீலா தன்னுடைய முதல் பாடலை இலங்கை வானொலியில் “Amateur Voice” நிகழ்ச்சிக்காக பாடினார். அந்த அறிமுகத்தை தொடர்ந்து 1967ல் அவர் தனது முதல் பாடலான “செண்டே அம்பரே நிஷ மல் யட” என்ற டால்டன் அல்விஸ் தயாரித்து லயனல் அலகம இசையமைத்த பாடலையும் இலங்கை வானொலியிலே பதிவு செய்தார். இது அவர் ஒரு பாடகராக தனது பயணத்தை ஆரம்பிக்க ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது. ஹிந்துஸ்தானி இசையில் பட்டப்படிப்பை தொடர்ந்த நீலா சங்கீத விஷாரத பட்டத்தை 1974ல் பெற்றார். இவருடைய குரல் கீழைத்தேய இசைக்கு தனி உணர்வை கொடுப்பதாலும் நாட்டுப்புற பாடல்களை அதற்கே உரிய பாணியில் பாடவதாலும் இவர் அந்த துறைகளில் மிகவும் சிறப்பாக செயற்பட்டார்.

நீலா ஒரு திறமையான பின்னணி பாடகராக மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார். சுமார் 67 திரைப்படங்களுக்கும் அதிகாமாக பாடியிருக்கும் நீலா, “கொலு ஹதவத” “Master Sir” போன்ற பாடல்களின் ஊடாக குரலில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி ரசிகர்களுக்கு அதே உணர்வை கொடுப்பதில் வெற்றி பெற்றார். சூரியாவுடனான அவருடைய முதல் பாடல் “Songs of Old Sinhala Theatre”என பெயரிடப்பட்டது. பின்னர் W.D.அமரதேவ உடனான ஒரு டூயட் பின்னர் 1979ல் T.M.ஜயரத்ன உடனான ஒரு ஒப்பந்தம் “Best of T.M. and Neela” என்ற பாடல் தொகுதியை உருவாக்கியது.

ஒரு பாடகர் என்பதை தாண்டி தன்னுடைய இசை அறிவை எதிர்கால சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக 28வருடங்கள் ஆசிரியப்பணி ஆற்றினார். 1998ல் அவர் ஓய்வு பெற்றதன் பின்னராக இலங்கை கலைகளை பிரதிபலிக்கும் பாடல்களை தனது நிகழ்சிகளில் பாடி தனக்கென நாடு முழுவது ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார். தன்னுடைய 45வது இசை வருடத்தை கொண்டாடும் முகமாக தனது தனியான நிகழ்ச்சியான “Master Sir”ஐ 2012ல் அறிமுகம் செய்தார். இதனூடாக இலங்கையின் இசைத்துறைக்கு இருந்த ரசிகர்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி மகிழ்வித்தார்.

தன்னுடைய சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஏக்கம் அவரிடம் எப்போதுமே இருந்ததுண்டு. 1989ல் யுனிசெப் அமைப்புடன் இணைந்து போலியோவிற்கு எதிரான செயற்திட்டத்தில் பணியாற்றினார். இதற்காக அவர் பாடிய பாடல் வானொலி மற்றும் தொலைக்காட்சியூடாக இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. அதற்கும் மேலாக “The Mother” எனும் நிறுவனத்தை ஆரம்பித்து சிறுவர்களுக்கான அவரது சேவையை தொடர்ந்தார். மேடையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் நீலா ஒரு பல்திறமையான படைப்பாளியே.

Neela performing with the Super Angel Band in the 80’s (image courtesy of Ramzy Mohamed)

நீலா எதையுமே அதிக ஈடுபாட்டுடன் செய்பவர், பாடலாக இருந்தாலும் கற்பிப்பதாக இருந்தாலும் சமூகத்திற்கு ஏதேனும் செய்வதாக இருந்தாலும் அந்த ஈடுபாடே அவரது வலிமை. இதுவே நீலாவிற்கு அதிக ரசிகர்கள் கிடைக்கவும் இலங்கை இசை துறையில் நீலா தனது இன்னிசை குரலால் தனி இடம் பிடிக்கவும் முக்கிய காரணங்களாக அமைந்தது.

Singing a duet with Visharada W. D. Amaradewa
Singing a duet with Visharada W. D. Amaradewa

ALBUMS

Best of Neela & TM
Best of Neela & TM
Songs of the Old Singhala Theatre (Nruti)
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!