Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

மூன்ஸ்டோன்ஸ்

தோற்றம் : 1966

அசல் வரிசை : கிளாரென்ஸ் விஜேவர்தன , அனெஸ்லி மாலவன, மொண்ட்டி வட்டலதெனிய, தம்மிக விஜேசிரி

வகை : சிங்கள பொப்பிசை

மூன்ஸ்டோன் ஆனது இலங்கையின்  சிங்கள பொப்பிசை வகையில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய இசைக்குழு  எனலாம். இசை எழுத்தாளரும்,இசையமைப்பாளரும் ,பாடகருமான மறைந்த   கிளாரென்ஸ் விஜேவர்தனவினால் தலைமை தாங்கப்பட்டதுடன் ; அனெஸ்லி மாலவன முன்னணி பாடகருமாக இருந்தார். இந்த இசைக்குழுவானது இசையுலகை ஒரு சூறாவளி போல் தாக்கி பிந்திய அறுபதுகளிலும் , முந்திய எழுபதுகளிலும் இலங்கையிலுள்ள மிகவும் புகழ்பெற்ற இசைக்குழுக்களில் ஒன்றாக திகழ்ந்தது .

1966 இல் சிறி சங்கபா கொரியா , கிளாரென்ஸ் விஜேவர்தனவிற்கு துணையாக பொருத்தமான முன்னணி பாடகராக அனெஸ்லி மாலவனவை கண்டெடுத்த போது, இந்த இசைக்குழு தோற்றம் பெற்றது. மொண்ட்டி வட்டலதெனிய(கொங்கா , கியூபன் டிரம் ), மற்றும் தம்மிக விஜேசிரி(மறக்காஸ் ) ஆகியோர் கிளாரென்ஸ் விஜேவர்தன (ரிதம் கிடார் ) மற்றும் அனெஸ்லி (பாடகர் ) ஆகியோருக்கு அதி சிறந்த துணைவர்களானர்.

சிறி சங்கபோ  கொரியா இந்தளவு திறமைமிக்க கலைஞ்சர்களை முன் கொண்டுவந்தது மட்டுமன்றி, இந்த குழுவிட்குதி மூன்ஸ்டோன்என நாமம் சூட்டினார். இலக்கிய ரீதியாக கூறின் இரத்தினக்கற்களின் நகரம் என அழைக்கப்படும் இரத்தினபுரியில் இவர்கள் உருவானவர்கள் என்பதனால் இப்பெயரிடப்பட்டது. வானலையில் பல பிரபலங்களை உயர்த்திவிட்ட விஜய் கோரியாவிற்கு சிறி சங்கபோ அறிமுகம் செய்து வைத்தார். 1967 இல் விஜய் கோரியாவின்சனிக்கிழமை நட்சத்திரம்எனும் சனிக்கிழமை பி . 9 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிக்காக மூன்ஸ்டோனின் முதல் பதிவு நடைபெற்றது. இது உடனடி புகழை ஈட்டித்தந்தது.

மங்களா ரொட்ரிகோ ( லீட் கிடார் ), சுனில் மாலவன ( லீட் கிடார் ), உபாலி உபேசேகர (சிதார் ) மற்றும் பெரோஸ் அஸ்மொன் ( பாஸ் கிடார் ) ஆகியோர் 1967 இல் இசைக்குழுவுடன் இணைந்தனர்.

L to R: Standing – Clarence, Annesley & Monty Seated – Mangala, Upali & Sunil 1967
L to R: Standing – Clarence & Annesley Seated – Feroz, Upali, Monty 1967

1967 இல்பீகன்ஸின் திருமண நிகழ்ச்சியொன்றினால் ஈர்க்கப்பட்ட கிளாரென்ஸ், மின்சார கிடாரினை அறிமுகப்படுத்தினார். இறுதியாக, பீகன்ஸினை சேர்ந்த சானக பெரேரா ( பாஸ் கிடார் ) மற்றும் விஜித பீரிஸ் (டிரம் ) ஆகியோர் இசைக்குழுவுடன் இணைந்தனர்.

“Sinhala Vocal Groups Launched by Patrick” by Malcom Vindurampulle, Sunday Obeserver, November 23, 2014

அறிமுகம்

மூன்ஸ்டோன் தனது முதலாவது இசைத்தட்டு ஒப்பந்தத்தினை கௌரி நிறுவனத்துடன் பிலிப்ஸ் லேபிளில், அட்டவணை இலக்கம் JVPC 007 தாங்கிய EP உடன் மேற்கொண்டது. இதில்மெங்கோ நெந்தா “, “சுது மெனிக்கே“, ” சீதா உதே “, “ருவன் புரியபோன்ற பாடல்கள் அடங்கும்.

சிலோன் ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாக மாறிய சிலோன் வானொலியின் ஆங்கில சேவையில் முதன் முதலாக இவர்களின் இசை ஒலித்தது.

மூன்ஸ்டோன் இசைக்குழுவானதுமெங்கோ நெந்தாபாடலினுடாக சிங்கள சேவையின் ஹிட் அலைவரிசையில் முதலாமிடத்தை கைப்பற்றியது. இந்த பாடலானது சிங்களம் மட்டுமன்றி ஆங்கில ஹிட் வரிசையிலும் கூட முதன்மையானதாய் இருந்தது. மூன்ஸ்டோனானதுகிங்எல்விஸ் பிரீசிலியை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டது.

பயணம்

இவர்களின் பிரதான திருப்புமுனையாக அமைந்தது 1968இல் ஜெரால்டு விசக்ரமசூரியவின் சில்ட்ரன்ஸ் புத்தக நிலையம், புதிதாக உருவாக்கப்பட்ட சூரியா லேபெலிற்கு இசைக்குழுவினை ஒப்பந்தம் செய்தமையே. ஜெரால்டுவின் அறிமுகமானது அவரது மகனும், இசைக்குழு அங்கத்தவரான மங்களா ரொட்ரிகோவின் நண்பருமான நேதாஜி மூலம் கிடைத்தது. மூன்ஸ்டோனின்மூன்ஸ்டோனின் ஹிட்கள் மேலும்எனும் EP தலைப்பில் சூர்யாவின் முதல் ஆல்பம் வெளியானது.

Sooriya recording of song "Dilhani" with The Moonstones, May 17, 1969 L to R: Chanaka, Sunil, Wijith, Annesley, Indrani, Clarence, Mangala, Anton

குழுவின் சூரிய லேபெளுடனான முதல் ஒப்பந்தம்தில்ஹானி“, “கொண்வஸ்ஸா “, “சுமுதுமல்“, “குசுமலதாஎனும் பாடல்களுக்கேயாகும். “தில்ஹானிபாடலுக்கு பொருத்தமான பெண் குரல் தேடிக்கொண்டிருந்தமையால் இந்தப் பாடல்கள் எதுவும் பதியப்படவில்லை. இந்திராணி பெரேராவை அனெஸ்லி குழுவிட்கு அறிமுகப்படுத்தும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.எப்படியோ அவர்களின் இரண்டாவது வெளியீடு மே 11, 1969, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சரியாக ஒரு வருடத்தில். இந்த அல்பமானது அக்காலத்தில் ஈட்டிய அதி உயர் வருவாயாயிருந்தது. இந்த நேரத்தில் என்டன் குணதிலகவும் லீட் கிட்டாராக இணைந்திருந்தார்.

இக்குழுவின் அடுத்த வெளியீடு, “மூன்ஸ்டோன் இந்திராணி பெரேராவுடன்எனும் தலைப்பில் சூர்யாவினால் உருவாக்கப்பட்டு டெக்கா லெபெலுடன் வெளியிடப்பட்டது. இந்த EP யானது இந்திராணியின்சிகிரியா“, பலரும் அறிந்தவன தெவ்லிய துருலே “, அனெஸ்லி இந்திராணியின் டூயட்டானபெம் கதாவமற்றும் அனெஸ்லியின்ராலஹாமி “, “சுமத்துமல்ஆகிய பாடல்களை உள்ளடக்கியிருந்தது.

“Moonstones” by Eustace Rulach, Ceylon Observer, 1969

கிளாரென்ஸ் மூன்ஸ்டோனிலிருந்து 1970இல் வெளியேறியதுடன் குழுவிட்கு அனெஸ்லி தலைமை தாங்க வேண்டியிருந்தது. இந்நிலையில் மைக் குணசேகர (ரிதம் கிடார் , ஹார்மனி ) தொகுப்பாளராக இணைந்திருந்தார். எனவே வரிசையானது பின்வருமாறு அமைந்திருந்ததுசுனில் மாலவன ( பாஸ் கிட்டார்), மங்கள ரொட்ரிகோ ( லீட் கிடார் ), லோரன்ஸ் மோவிரிக்ஸ் ( கீ போர்ட் ), ஸ்டான்மோர் டி ஜோன்க் ( ட்ரம் ) மற்றும் லலித் பெர்னாண்டோ (பாடகர் ).

இசைக்குழுவானது பல வெற்றிப்படைப்புகளை தந்தது, உதாரணமாகதுன்ஹிண்ட மணமாலி “, “தொட்டிய“. விரைவிலேயே சிங்கள மற்றும் மேற்கத்தேய பொப்பிசை  பாடல்களை பாடும் நடனக்குழுவாக புகழ் பெறத்தொடங்கியது.

The Moonstones at Sea View Club, 1972

மூன்ஸ்டோனானது பின்னணி இசைக்குழுவாக சூரிய ஆல்பம் CHB 027, மெண்டிஸ் போர்சொமின்மம போஹோமா பயவுனாமற்றும் CHB 031 போல் பெர்னாண்டோவின்எகொட கொடிய்  “இற்கு இருந்தது. பிரபல  சூர்யா நிகழ்ச்சிகளில்தொடர்ந்தும் சிறப்பிடம் பெற்றது

மூன்ஸ்டோனானது ரேடியோ சிலோனில் முதலில் சிங்கள பொப்பிசை ஒலிபரப்பிய ஓரிரு இசைக்குழுக்களில் அடங்குவதோடு எலக்ட்ரிக் கிடார், சிதார் இசை என சிங்கள பொப்பிசையை உருமாற்றியது.

கடைசியில் இசைக்குழு பிரிந்தது. எனினும் அனெஸ்லி மற்றும் கிளாரென்ஸ் மீண்டும் இணைந்துதி சூப்பர் கோல்டன் சைம்ஸ்இணை உருவாக்கினர் .

Maxwell Mendis backed by The Moonstones at Sooriya show at Navaragahala, December 17, 1972

EDITED BY MALINDA SENEVIRATNE

ALBUMS

More Hits by the Moonstones
Dilhani by the Fabulous Moonstones
The Fabulous Moonstones
The Sooriya Show
The Sooriya Show : Vol 2
Baila Session
The Moonstones with Indrani Perera (Sigiriya)

கலைஞர்கள்

error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!