Sooriya Records Sooriya Records
Menu

மெல்ரோய் தர்மரத்ன

பிறப்பு : 12 மார்ச் 1947
அங்கத்துவம் : The Dharmaratne Brothers
இசை பிரிவு. : சிங்கள பொப்பிசை

12 மார்ச் 1947இல் குலரத்ன மற்றும் ஸ்டெல்லா தர்மரத்ன ஆகியோரின் நான்காவது புதல்வனாக அவதரித்த மெல்ரோய் கிறிஸ்டி, மாக்ஸ்வெல், ரொனால்ட் ஆகியோரின் தம்பியாவர். இவர்கள் நால்வரும் இணைந்தே Dharmaratne Brothers இசைக்குழுவை உருவாக்கினர். இவர்கள் தவிரவும் ஸ்வீட்டி, ஷெர்லி என்று இரு சகோதரிகளும் இருந்தனர். மெல்ரோய் தானாகவே செதுக்கப்பட்ட ஓர் இசைமேதை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் இவை மட்டுமல்லாமல் ஒரு ஊடகவியலாளர்.

மெல்ரோய் தனது கல்வியை கொழும்பு புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கற்றார் இங்குதான் இவருடைய கலைத்திறமையை இனங்கண்ட சகோதரன் ஜோன் தரம் ஆறில் படித்து கொண்டிருக்கும் போதே அவரை ஏனைய பாடசாலை மாணவர்கள் முன் பாட ஊக்கமளித்தார். ஒவ்வொரு வெள்ளியும் பாடசாலை முடிந்ததும் மெல்ரோய் பாடுவது வளமையாகியது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவர்பாடிய “சீதா சுனில் தியா டஹரா” பாடலை கேட்ட சகோதரர் எட்வார்ட், இசைப் பிரிவின் தலைவர் தங்களுடைய நிகழ்ச்சியான “Our Own Songs”இல் மெல்ரோய் பாடவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மெல்ரோய் புனித லூஸியா தேவாலயத்தின் பாடல் குழுவில் ஒரு உறுப்பினர். பாலகனான மெல்ரோய் இலங்கையின் பிரபல பாடகர்கள் பலரால் ஈர்க்கப் பட்டிருந்தார் உதாரணமாக. Christopher Paul, Vincent de Paul Peiris, Mohideen Baig, Milton Perera, H.R.Jothipala மற்றும் Sunil Shantha ஆகியோரை கூறலாம்.

இவர் சிறுவயதாக இருக்கும் போதே தந்தையை பறிகொடுத்தார். ஆனாலும் தாயான ஸ்டெல்லா தன்னுடைய குடும்பத்தை பற்றி அதிகம் அக்கறை கொண்டிருந்தார். பிள்ளைகளின் திறமைகளை வளர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்தார். மெல்ரோய் மற்றும் அவரது இளைய சகோதரனான ரொனால்ட் பாடசாலை மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பங்குபற்றும் போது தங்களை “The Dharmaratne Brothers” என்று பெயரிட்டுக்கொண்டார்கள்.

L to R: Ronald, Melroy, Stella, Maxwell, Christie
Melroy receiving his first communion

1964ல் மெல்ரோய் பிரபல சினிமா சஞ்சிகை ஒன்றிற்கு அதன் ஆசிரியரான ஆரியரத்ன கஹவிட்டவின் அழைப்பின் பேரில் “Kala”(கலை) எனும் தலைப்பில் எழுத ஆரம்பித்தார். இலங்கையில் ஆங்கில திரைப்படங்களுக்கு சிங்கள விமர்சனங்கள் எழுதியவர்களுள் இவர் முதன்மையானவராவார்.

1966ல் மெல்ரோய் மற்றும் ரொனால்ட் மெதடிஸ்த கல்லூரியில் பங்குபற்றிய நிகழ்ச்சி ஒன்றில் அவர்களின் மருமகளான ஷிரோமி இறுதி போட்டிக்கு தெரிவாகி இருந்தாள்.

இந்நேரத்தில் இவர்களுடன் Dharmaratne Brothersல் இணைந்த மாக்ஸ்வெல் மட்டும் கிறிஸ்டி மூலமாக இவர்கள் பங்குபற்றிய இசை நிகழ்ச்சிகள் அதிகரிக்க தொடங்கின. இவற்றில் ஆரம்ப காலங்களில் ரொனால்ட் இசையை ஒழுங்கமைத்தாலும் பின்னர் அதிகமாக மெல்ரோய் தான் இசை, பாடல் வரிகள், மேடையமைப்பு அனைத்தையுமே வடிவமைத்தார் எனலாம்.

மெல்ரோய் இந்த சகாப்தத்தின் பாரிய தூண்களை நேசிக்கிறார். அவர்களே மக்கோம் அண்ட்ரீ மற்றும் ஜயதிஸ்ஸ ஹெட்டியாராச்சி ஆஜியோர் அவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர்கள். அவர்கள் போலவே அவருடைய பாடல்களை பதிவு செய்ய உதவியவர் விஜய கூரே ஆவார்.
பின்னர் “சவாச” நாளிதழில் கட்டுரையாளராக இணைந்தார். அதேவேளையில் சினிமா செய்தித்தாளான “விசித்திர”விற்கும் அதனுடைய ஆசிரியரான U. அமரசேனவின் அழைப்பினால் சில கட்டுரைகள் எழுதினார்.

Dharmaratne Brothers with Shiromie Fernando perform at the first ever Sooriya Show at Hotel Taprobane, September 14, 1969
Dharmaratne Brothers with Shiromie Fernando perform at the first ever Sooriya Show at Hotel Taprobane, September 14, 1969

ஒரு பாடகராக மட்டுமல்லாமல் திரைக்கதை வசனகர்த்தாவாகவும் இவர் பாடசாலையில் புகழ் பெற்றிருந்தார். ஒருமுறை பாடசாலையில் ஒரு மேடை நாடகத்தை எழுதி இயக்கி முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க அழைக்கும் அளவுக்கு அவர் திறமையான நாடக கலைஞராகவும் இருந்தார்.

1960ல் மெல்ரோய் தன்னுடைய முதல் மேடை நாடகமாக “மாயா”வினை இலங்கையில் மேடையேற்றினார்.

Melroy with his younger brother Ronald
Melroy with his younger brother Ronald

“சதுட்ட” நாளிதழில் வெளிவந்த அவரது கேலிசித்திர தொடரான “சபின்ன” அவரை ஒரு சித்திர கலைஞராக வெளியுலகில் பதிய செய்தது. பின்னர் அவரது முதல் நாவலாக “மலவுங்கெ கதாவக்” 1971ல் வெளியிடப்பட்டு பின்னர் “கஹாலுவா”எனும் திரைப்படமாகவும் வெளிவந்தது.

குழந்தை நட்சத்திரமான ஷிரோமி பெர்னாண்டோவின் வாத்திய உருவமாக மட்டும் இவர் இருக்கவில்லை. ஷிரோமியின் அதிகமான பாடல்களை ஒழுங்கமைத்து இயக்கியது வரை இவரே. இவரது காலத்தின் ஏனைய பிரபல இசை கலைஞர்களிற்காகவும் இவர் பாடல்களை எழுதியுள்ளார். உதாரணமாக, எச்.ஆர்.ஜோதிபாலவவிற்காக “ஆயுபோவான்” மில்டன் மல்லவாரச்சியிற்காக “மே மாய் கஹவ யட” மற்றும் போல் பெர்னாண்டோவிற்காக “களு கண்ணாடி” ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இவருடைய அடையாளத்தை பல சிங்கள பாடல்கள் சுமந்து வருகின்றன. உதாரணமாக கருணாரத்ன அபேசேகரவினால் எழுதப்பட்ட எச். ஆர்.ஜோதிபாலவின் “துரகத்தனய”. ரவி ரணசிங்கவினால் எழுத்துகிப்பட்ட போல் பெர்னாண்டோவின் “ஏகோட கோடே” ஆகியவற்றை குறிப்பிடலாம்.

மெல்ரோய் சூரிய லேபலிற்காக ஒரு முழுமையான குழந்தை பாடல் தொகுப்பை இசையமைத்து இயக்கி இருக்கிறார்.

Courtesy: Melroy Dharmaratne
Courtesy: Melroy Dharmaratne
Dharmaratne Brothers at a recording at Sarasaviya Studios, Dalugama
Dharmaratne Brothers at a recording at Sarasaviya Studios, Dalugama
konda namagena and lama geetha

Latha Walpola and Milton Mallawarachchi recording a duet for a film titled ‘Pathini’ which was never completed. Music direction by Melroy Dharmaratne.

Directed by Sugath Samarakoon and the script by late K. D. Nicolas, the film had 4 songs which the theme song was sung by T. M. Jayaratne accompanied by a 32 piece orchestra. These songs were recorded by Donald Ivan at Joe Neth Studio Borella in 1978.

Many Sinhala hit songs carry his musical signature, such as H. R. Jothipla’s “Durakatanaya” written by Karunaratne Abeysekera, Paul Fernando’s “Egoda Godee” written by Ravi Ranasinghe.

Melroy also composed and directed music for a complete set of Children’s songs recorded on Sooriya label.

In 1976 Merloy married Theresa Antoinette, having fallen in love with her during the time they both served as log writers at the Supreme Court of Colombo. They have a beloved daughter named Sinali Mary Dharmaratne.

“Kandayam Geetha Thulin Deshiya Sangeethaya Poshanaya Kala Hakiy” by Melroy Dharmaratne, Sarasaviya, January 30, 1997
“Kandayam Geetha Thulin Deshiya Sangeethaya Poshanaya Kala Hakiy” by Melroy Dharmaratne, Sarasaviya, January 30, 1997

மெல்ரோய் ஒரு சுதந்திர ஊடகவியலாளராக தன்னுடைய விமர்சனங்களை தர்மசிரி கமகேவின் “யோவுன் ஜனதா” மற்றும் ஜயந்த சந்திர சிரியின் “நாவலிய” ஆகியவற்றிற்கு எழுதினார்.

“நவ மகக்கா யான்னோ” எனும் நாடகத்தை எழுதி இயக்க 1977ல் மெல்ரோய் அகில இலங்கை நாடக போட்டியில் சிறந்த நடிகர், சிறந்த ஒப்பனை, சிறந்த நாடகம் ஆகியவற்றிற்கான விருதுகளை அள்ளியது. அதே போல அவருடைய “சிவில் யுத்தம்” என்ற நாடகம் 10முறை மேடையேற்றப்பட்டது. இந்த திறமைகள் காரணமாக இவர் ஏனைய நாடக தயாரிப்பாளர்களால் நாடகங்களை இயக்க எழுத மட்டுமல்லாது

இசையமைக்கவும் பல தடவை அழைக்கப்பட்டுள்ளார்.
2005ல் இவர் தன்னுடைய இரு நாவல்களான “விநீத ரதீஷ” மற்றும் “ப்ரேமய வைராய” ஆகியவற்றையும் 2014ல் “பவ் சஹ பின்” என்ற நாவலையும் வெளியிட்டார்.

மெல்ரோய் இசையை முழுவதுமாக கற்றிராவிட்டாலும் இன்று அவர் ஒரு பாடகராக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, வசனகர்த்தாவாக ஒரு சுதந்திர ஊடக்கவியலாளராக மற்றும் ஒரு நாவலாசிரியராக திகழ்வது சிறப்பம்சம்.

“Melroy in Music” by Prasad Gunawardene, The Island, October 27, 2002
“Melroy in Music” by Prasad Gunawardene, The Island, October 27, 2002
“Melroy Dharmaratne” by Dhammika De Silva, Rivira, April 04, 2013
“Melroy Dharmaratne” by Dhammika De Silva, Rivira, April 04, 2013
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!