Sooriya Records Sooriya Records
Menu

மரியஸெல்லே குணத்திலக

பிறப்பு : ஜூன் 11

அங்கத்துவம் : The Emeralds, The Midnight Mist, The Kings

இசைப்பிரவூ : சிங்களப் பொப்

மரியஸெல்லே இளமையிலிருந்தே தன்னுடைய இசையார்வத்தால் படிப்படியாக அனைவரது மனங்களையூம் கொள்ளையடித்த ஓர் இசைக் கலைஞராவார்.  அவருடைய ஆரவாரமான குரலும் தனித்துவமான தோரணையூம் துடிப்பான நடனங்களின் மூலம் நிகழ்ச்சிகளில் ரசிகர்களைக் கவரும் தன்மையூம் இன்றைய இலங்கையில் அதிகம் பேசப்படும் ஒரு இசைக்கலைஞராக அவரை மாற்றியிருந்தது.

சுட்டிப் பெண்ணான மரியஸெல்லே சிறுவயதிலிருந்தே பாடகியாக வெண்டும் என்பதை கனவாக கொண்டிருந்ததால் அவர் எண்ணியது போன்றதொரு ஆரம்பம் கிட்டியது.  ஏழுவயதான மரியஸெல்லே அப்போதெல்லாம் ஹவூஸ்பார்ட்டிகளிளல் பாடுவதை வழக்கமாக கொண்டிரந்தார். பத்து வயதாகும் போது “Observer Tatent Search Junior Section” போட்டியினுடைய மகுடத்தை வென்றார்.  மரியஸெல்லே இந்த வெற்றி அவரை ஒரு இசைக்கலைஞராக அனைவருக்கும் அடையாளம் காட்டியது.  சுட்டியான மரியஸெல்லே தன் வயதினருடன் சேர்ந்து “Junior Rhythmiers”எனும் ஓர் இசைக்குழுவை அரம்பித்தார்.  கூடிய சீக்கரமாகவே இலங்கை வானொலி மூலமாக அழைக்கப்பட்ட இவர்கள் முழு இலங்கையிலும் பிரபல்யமானார்கள்.  

பாடலில் மட்டும் கவனம் செலுத்தாது தனது இசையார்வத்தை வாத்தியங்களின் பக்கமும் மெல்ல திருப்பினார் மரியஸெல்லே.  கிட்டாரின் அடிப்படைகளை காலஞ்சென்ற வின்ஸ்டன் ஜெயவர்த்தனவிடம் பயின்றார் இது பிற்காலத்தில் மரியஸெல்லே மேடை நிகழ்ச்சிகளில் தனியாக கிட்டார் இசைத்து பாட வேண்டும் என்ற கனவினை நனவாக்கியது.

மரியஸெல்லேயின் பாடல்களைப் போல உள்நாட்டில் பாடகர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.  “The Emeralds”, “The Midnight Mist” ஆகிய இசைக் குழுக்கள் மரியஸெல்லேயின் இசைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.  1977 இல் மரியஸெல்லே ஒரு மாற்றத்தை உருவாக்கி ஒவ்வொரு இலங்கையரையூம் மகிழ்வுடன் ஒளியை முகங்கொடுக்கச் செய்தார்.

Mariazelle with “The Midnight Mist”

ஒரு கால கட்டத்தில் பெண் பைலா பாடகர்கள் குறைவடைந்து சென்ற காலகட்டத்தில் மரியஸெல்லே பலருடைய கவனத்தை ஈர்த்து பலருக்க முன்னுதாரணமாக திகழ்ந்தார்.  அவருடைய பொறுமையூம் விடாமுயற்சியூம் ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு துறையில் மரியஸெல்லேயை நட்சத்திரமாக மாற்றியது.

மரியஸெல்லே இலங்கையின் பொப்பிசைப் பாடலின் தந்தையான Clarence Wijewardana, The Gypsies, M.S. Fernando, Annesley Malawana ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இலங்கை இசைத்துறையில் வரலாறுகளில் பதியப்பட்டது.

கண்டி லமிஸ்ஸிஎன்ற மரியஸெல்லேயின் முதலாவது தனிப்பாடல் வெளியீடு உள்நாட்டு பைலா பாடல் ரசிகர்களையூம் கவர்ந்தது.  இதனாலே அவர் பைலாவின் மாய இராணி(Queen of Baila) என்று இரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

ரஹசய் சொத்துறு ஜீவே” “யொவூன் சிஹின லேகோஒப லபா கன்ன ஒப ஹடமற்றும் காயூ கீஆகியன கண்டி லபிஸ்ஸியின் ஒரு சில பாடல்களாகும்.  முரியஸெல்லேயின் மேலைத்தேய பொப்பிசை முதல் கண்டிய பைலா பாட்ல்கள் வரை பாடும் ஆற்றல் அவரை தனித்தவமாக பிரசாசிக்க செய்தது.

முரியஸெல்லே தன்னுடைய இசையையூம் பாடல்களையூம் இலங்கைத் தாண்டி உலகம் முழுவதுமாக பரப்ப 1983 இல் “The Kings” உடன் இணைந்து செயற்பட்டார்.

கண்டி லரிஸ்லிபயணம் கடினமானது.  ஓர் விபத்தில் இவரது முள்ளந்தண்டு மற்றும் கழுத்து எலும்பில் ஏற்பட்ட சேதங்கள் கூட இவரின் இசையார்வத்தை தடுக்கமுடியவில்லை.

மரியஸெல்லேயின் இசை சில தசாப்தங்களாக உருவாகாமல் போயிருந்தாலும் இலங்கை பொப்பிசை இருக்கும் வரை பொப்பிசை ரசிகர்களால் என்றும் மனதால் ரசிக்கப்படுபவர் மரியஸெல்லே.

At live shows singing together with Desmond de Silva & Ronnie Leitch

கலைஞர்கள்

error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!