அதிர்வு மற்றும் நேர்த்தியுடன் இருக்கிறது. பணக்கார டோன்களின் கலவையானது, புலன்களைக் கவர்ந்திழுக்கும் மற்றும் மின்மயமாக்குகிறது. இது எரங்கா மற்றும் பிரியங்கா!
அதிரடியான கவர்ச்சியால் மனதை கவரும் உயர்தர தொனியை கொண்டது எறங்கா பிரியங்கவின் இசை எறங்கா பிரியங்க இருவருமே இசை பின்னணியை கொண்டவர்கள். எறங்காவின் தந்தை லியனட் வீரசிங்க பல பாடல்களை பாடியவர் பியானோ இசை கலைஞர். அவரது சகோதரர் சோஹன் ஒரு இசையமைப்பாளர் ஆகும். ப்ரியங்கா சிறுவயதிலிருந்தே கிட்டார் இசைத்து இசையுடன் வளர்ந்தவர். 1960களில் பிரியங்க எறங்காவின் குடும்பத்துக்கு அறிமுகமான போது இவர்கள் முதன் முதலில் சந்தித்தனர். இவர்கள் இசையில் கொண்ட ஆர்வம் இவர்களிடையே நட்பை ஏற்ப்படுத்தியது. மூன்று வருடங்களில் இவர்களுக்கு திருமணமாகி மட்டக்களப்புக்கு அருகில் ரோகம் எனும் ஊரில் வசித்தனர். இந்த கிராமிய சுற்றாடல் இவர்களின் தனித்துவமான இசையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியது.

1965ம் ஆண்டு Lewis Browns இல் எரங்கா மற்றும் ப்ரியங்கா பாடல்கள் பாடும் போத அவர்களின் திறமையை அடையாளம் கண்ட டொனி பெர்னாண்டோ அவர்களுக்கு Galle face Hotel இல் Coconut Grove நிகழ்ச்சியில் பாடுவதற்காக அழைத்தனர். அன்றிலிருந்து இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமது உயிரோட்டம் நிறைந்த சிங்கள மற்றும் மேழைத்தேய பாடல்களை பாடினர்.
மூன்று வருடங்களின் பின் இருவரும் இங்கிலாந்துக்கு செல்ல செய்தனர். அங்கு சென்று பாடல்கள் பாடி தமது வாழ்வாதார செலவுகள் மற்றும் பயணச்செலவுகளுக்கான பணத்தை சம்பாதித்து கொண்டனர். இந்த சமயோசிதமும் இயற்கையாகவே உணர்ச்சிவசப்படும் தன்மையும் இவர்களது இசையை மேலும் துடிப்பானதாக மாற்றியது. போம்பே, கராச்சி, டெஹெரேன், இஸ்தான்புல், ஏதென்ஸ், ஜேர்மனி, பாரிஸ், என உலகில் பல்வேறு நகரங்களில் இவர்களின் இசை பயணம் தொடர்ந்தது. அவர்களது இரசிகர்களை போலவே பாடல்களிலும் பல மொழிகளில் காணப்பட்டது.அவர்கள் கிரேக்கம், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் பாடல்களை பாடினர். தம் தாய்மொழிகளில் பாடல்களை கேட்ட மக்கள் இவர்களின் பாடல்களில் விசேட நெருக்கத்தை உணர்ந்தனர்.தற்போது அவர்கள் 15 வெவ்வேறு மொழிகளில் பாடல்களை பாடுகின்டனர். இவர்களின் பாடல்கள் அனைத்தும் கவர்ச்சியான கலவையாக விளங்கியது. “பொடி நோனா”, “மவக் மேலொவெஹி” ஆகிய பாடல்கள் 1976இல் சூரியவால் பதிவு செய்யப்பட்டது.
தம் தடங்களை பதித்தவாறு இங்கிலாந்து சென்ற அவர்கள். BBC யால் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இங்கிலாந்தின் உள்ளேயும் வெளியேயும் கச்சேரிகளை நடத்தினர். அவர்களின் ஒரே மகனான தினுக பிறந்து சில வருடங்களில் லொஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சென்றனர். இவர்கள் EMI, David Frost Agency மற்றும் The Noel Gay association போன்ற நிறுவனங்களில் தமது பாடல்களை பதிவு செய்தனர்.இவர்களின் பாணியின் மாற்றத்தினால் அந்நிறுவனங்களுடன் ஏற்றப்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒப்பந்தம் நிலைக்கவில்லை. எரங்காவும் பிரியங்கவும் தமது தனித்துவமான பாணியை கொண்டிருந்தனர்.அதனையே இவர்களது இரசிகர்களை விரும்பினர்.

பின்பு இவர்கள் நியூ யோர்க்குக்கு நகர்ந்தனர்.அங்கேயே பாடல்களை பாடிவந்தனர். இவர்கள் அடிக்கடி இலங்கைக்கும் வந்து பாடல்களை பாடி சென்றனர்.இவர்கள் வென்றெடுத்த மனங்களுக்காக இன்றும் பாடல்களை பாடுகின்றனர். அவர்களின் கூட்டணியாலும் பரபரப்பான நிகழ்ச்சிகளாலும் தங்கள் அடையாளத்தை சர்வதேச தரத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.திறமை, சமயோசிதம் மற்றும் நிறைந்த அன்பால் ஒருவர் அடையக்கூடிய உயரத்துக்கு எடுத்துக்காட்டாக இவர்களின் வாழ்க்கை விளங்குகிறது.
WRITTEN BY THARAKA RANCHIGODA
EDITED BY NADEESHA PAULIS




Sooriya Show Vol III
