உண்மையில் ஒரு வினோதமான மனிதனாலேயே வாழ்கையின் வேடிக்கையான பகுதியை சித்தரித்து மனிதர்களை சிரிக்க வைக்க முடியும்.
எடி ஜயமான்னே எனும் வன்னிஆரச்சிகே டான் டேவிட் விக்டர் ஜயமான்னே அவ்வாறான ஒருவரே. இவரும் இவரது சகோதரரான B. A. W ஜயமான்னேயும் 1930 இல் உருவாக்கிய திரையரங்கு குழுவான மிநேர வின் மூலம் இலங்கை திரைப்படத் துறைக்கு குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை ஏற்படுத்தினர். இவர்கள் தமது பாத்திரங்கள், காட்சிகள் மூலம் சிலோன் பாத்திரங்களுக்கும் மேலைத்தேய முறைகளுக்கும் இடையிலான இணைப்பினை விநோதமாக சித்தரித்தனர். கலாச்சாரங்களுக்கிடையிலான சேர்க்கை, துரிதமாக நவீனமயப் படுத்தப்பட்டமையினை உள்வாங்க நாளாந்த வாழ்வில் மனிதன் படும் பாடு மற்றும் இவற்றால் விளைந்த பக்க விளைவுகள் என்பன இவரது திரை படங்களில் வினோதமான முறையில் உயிர் பெறுகின்றன.

“கடவுனு போரோந்துவா” திரைப்படமானது ஜயமான்னே சகோதரர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கை சினிமாவிற்கும் ஒரு மைல்கல் திரைப்படமாய் அமைந்தது. ஏனெனில் இதுவே இலங்கையில் படம் பிடிக்கப்பட்ட முதல் சிங்கள திரைப்படம். ஜயமான்னே சகோதரர்களின் முந்திய வேலைகள் தென்னிந்திய இயக்குனரான S. M. நாயகமின் கவனத்தை பிடித்திருந்ததுடன், 1947 இல் இந்த திரைபடத்திட்கான உரிமையை பெற்றுக்கொண்டார். “மனப்புவா” ஆக எடி ஏற்ற பாத்திரத்திற்கு “ஜோசி பாபா” பத்திரத்தை ஏற்ற ஜெமினி ககாந்தா மகத்தான ஆதரவு வழங்கினார். அன்றைய காலத்தில் இருந்த தென்னிந்திய திரைப்படங்களின் ஆதிக்கத்தினால், இசையும் பாடலும் திரைப்படத்திற்கு மெருகூட்டின.
இந்த வெற்றியானது வெள்ளித் திரையை ஒளியூட்டிய தொடர் சிறந்த படங்களின் முதலாவதே. “கொலோம்போ சந்நிய” திரைப்படமானது கிராமத்து குடும்பம் ஓன்று கொழும்பின் நகர வாழ்க்கை முறைக்கு இசைவாக்கம் அடைய முயற்சிப்பதையும் காண்பிப்பதுடன், நாடகமயப்படுத்தப்பட்ட நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பார்வையாளர்களை சிரிக்கச் செய்யும். “கொலோம்போ சந்நிய” இற்கான பதிவானது சூரியா லேபலின் கீழ் செய்யப்பட்டது.



எடி தனது காதலை தேட வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கவில்லை. மினேர்வ குழுவுடன் வேலை செய்து கொண்டிருக்கும் போது தனது வாழ்வின் பாதியை கண்டு கொண்டார். ருக்மணி தேவி எனும் பெயருள்ள மாதான அவரும், இவரது திரைப்படங்களுக்கு உள்ளம் உருகிட உயிராய் உழைத்துள்ளார். இலங்கையின் திரைப்பட துறையில் நன்கு பரீட்சயமான துடிப்பான இவர் ஸ்ரீ லங்காவின் நைட்டின்கேள் என அழைக்கப்பட்டார்.
ஜயமான்னே குடும்பத்தின் இரண்டு சகோதரர்களும் வெள்ளித்திரையில் தொடர்ந்து தமது ரசிகர்களை உல்லாசப் படுத்திக்கொண்டிருந்தனர். “ஹதிசி விநிஷ்சய” (1949), “செங்கவுனு பிளிதுற” (1951), “உமது விச்வாசைய” (1952) ஆகிய திரைப்படங்கள் யாவும் ஜயமான்னே சகோதரர்களால் இயற்றப்பட்டவையே.






1953 இல் இந்த சகோதரர்கள் “கெல ஹன்ட” எனும் புத்தகத்தின் கருத்திற்கு உயிர் மூச்சுக் கொடுத்தார்கள். இலங்கையின் திரையரங்குகளில் நேயர்கள் முதல் முறையாக தாம் விரும்பி வாசித்த புத்தகம், தம் கண் முன்னாலேயே உயிர் பெற்று உரு மாறுவதை கண்டனர்.
“ஐராங்கனி”(1954), “மத பேதைய”(1955), “பெரகதோறு பேனா”(1955), “தைவ விபாகைய”(1956), “வணலியா”(1958), “கவட அடரே”(1960) மற்றும் “மங்களிகா”(1963) ஆகிய திரைப்படங்களும் இந்த வழக்கை தொடர்ந்தவையே.
எடி நடித்த சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் இன்றும் உள்ளுர நகைப்புடன் நினைவு கூறப்படுகின்றன. “சந்தேசெய” (1960) இல் இசைகலைஞராக, “கொலோம்ப சந்நிய” (1976) இல் ஆபரணம் ஒன்றை கண்டெடுத்து பணக்காரனான கிராமத்து முட்டாளின் சகோதரனாக நடித்தவை. அது மட்டுமன்றி சில கலை படைப்புகளில் முக்கிய பாடகராகவும் இருந்துள்ளார், உதாரணமாக “தக்கிட தரிகிட உடபென நடன்ன ஹிதுனா”, “கொலோம்புரே ஷ்ரியா”.
ஐரோப்பிய பாங்கின் ஆதிக்கத்திற்கு இசைவாக்கமடைய போராடிக்கொண்டிருக்கும் மக்கள் படும் கஷ்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இவரது சிந்தனை போக்குக்காகவும், கூர்மையான அறிவுக்காகவும் ஒரு நகைச்சுவை நடிகனாக நினைவுகூறப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையரின் உணர்சிகளை ஞாபகப்படுத்துவதால், கருப்பு வெள்ளை படமாயினும் மக்கள் இவரது செயற்பாடுகளை காண விரும்புகின்றனர்.



எழுதியது ருவிந்தி தமாஷி
திருத்தம் நதீஷா பாலிஸ்