டிக்சன் குணரத்னே எனும் பெயரை கூறும் போதே திரவம் போன்ற அவரது விரல்கள் பிரெட் போர்டினை தொட்டவுடன் எழும் புரட்சிகரமான கிற்டார் இசையின் இனிமையான நினைவுகளின் உணர்வு வரும். சிங்கள பொப்பிசை துறையில் லீட் கிற்டாருக்கு அளித்த தனித்துவமான பங்களிப்பினால் இசை ஆர்வலர்கள் மத்தியில் டிக்சன் அறியப்படுகிறார்.
இவருக்கு இசை அறிமுகம் வீட்டிலேயே கிடைத்தது. இவரின் தந்தை ஒரு இசை ஆர்வலர், வயலின் மற்றும் ஆங்கில மண்டலின் வாசிக்கக் கூடியவர். இதனாலேயே சிறு வயதிலிருந்து இசையுடன் பரிச்சயமாயிருந்தார்.
எனினும், இவரது இசை தொழில் பின்னாளில் பாடசாலையில் உள்ள போதே தொடங்கியது. இசிபதன வித்தியாலயத்தின் மாணவனாக முதலில் ஒரு வருடம் வயலினும் பின்னர் சிடாரும் இசைத்தார். சுயமாக கற்ற கிடார் வந்தது பிற்பாடே. நிச்சயமாக, சிறு வயதிலேயே இசையுடன் வாழ்ந்து , மூச்சுவிட்டதனால், இசையின் பாலான ஆர்வம் வளர்ந்ததுடன் பிரபல கிடார் நுண்கலைத்திறன் கொண்டவராய் மின்னவைத்தது.
அறிமுகம்
இவரது இசைத்துறைக்கான அறிமுகம் “பய்நியர்ஸ்” இசைகுலுவுடனே. இதனை தலைமை தாங்கிய ராஜ் தசநாயகே என்பவர் புகழ்பெற்ற சூப்பர் கோல்டன் சைம்சின் ட்ரம்மர் ஆன ஸ்ரீகாந்தவின் சகோதரர்ஆவார்.
இந்த காலத்தில், ஒரு திருமண நிகழ்ச்சியின் போது க்ளறேன்ஸ் விஜெவர்தேனவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டிக்சொனின் தனித்துவமான இசை அதிர்வுகள் அது போன்ற இன்னொரு மனதினை அழைத்திருக்கக் கூடும். “ அந்த நேரத்தில், க்ளறேன்ஸ் மூன்ஸ்டோனிலிருந்து விலகியிருந்ததுடன் புதிய குழுவை உருவாக்க அங்கத்துவர்களை தேடிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் ஒரு அங்கத்துவராக வர விருப்பமா என வினவிய போது வீட்டில் கேட்க வேண்டும் என பதிலளித்தேன்” என டிக்சன் நினைவுப் படுத்திக்கொள்கிறார். அந்த நேரத்தில் இவரது தந்தை இறந்திருந்ததால் தந்தைக்கு பதிலாக இவரது சகோதரரே பெரிய முடிவுகள் அனைத்தையும் மேற்கொண்டார். அனுமதி கிடைத்தவுடன் டிக்சன் கோல்டன் சைம்ஸ் இற்கு க்ளறேன்ஸ் உடன் ஒத்துழைக்க, பச்சிஸ்ட் ஆக சானக பெரேராவும், ட்ரம்மர் ஆக விஜித் பீரிசும் இருந்தனர். இந்த குழு முதலில் ஜெரால்ட் விக்றேமசூரியவுடன் ஒலிப்பதிவு செய்ததுடன் அறிமுக ஆல்பம் சூரியா லேபெளுடன் உயிர் பெற்றது.
சில வருடங்களின் பின் டிக்சன் மற்றும் க்ளறேன்ஸ் கோல்டன் சைம்ஸ் இலிருந்து வெளியேறினர். “ நாங்கள் அன்னேஸ்லி மாலவனவை தொடர்பு கொண்டு புதிய குழுவொன்றினை உருவாக்க ஒத்துழைப்பு தர முடியுமா என் வினவினோம். அன்னேஸ்லி உடனடியாக சம்மதம் தெரிவித்ததோடு சூப்பர் கோல்டன் சைம்ஸ் பிறந்தது” என கூறுகிறார். இவர்களது முதல் பதிவும் சூர்யா லேபலின் கீழ் 1973 இல் நடந்தது. இது “கண்டசுரிண்டுனி”, “சீத சுளங்கக்”, “சத்துட செனசும”, “பென புபுல” ஆகிய பாடல்கள் உள்ளடங்கிய EP “தி சூப்பர் கோல்டன் சைம்ஸ் அட் கதரகம” இட்குரியது.




எமது சம்பாஷணையின் இத்தருணத்தில் , டிக்சன் இன்றளவும் இனிமையாக வைத்திருக்கும் பழைய நினைவொன்றுக்கு சென்றார்: அவரது முதலாவது உத்தியோகபூர்வ ஒலிப்பதிவு. இது 1970 இல் சூரியா லேபெளுடன் தி த்ரீ சிஸ்டேர்ஸ் : இந்த்ராணி, மல்லிகா, ஐராங்கனி இட்காகும். இது “சிஹின் சினிது”, “மம கிரில்லியக்”, “பிபென பியும்”, “மே கியா” ஆகிய பாடல்களை உள்ளடக்கிய EP “ தி சென்சேஷனல் த்ரீ சிஸ்டேர்ஸ்” இட்காகும்.
டிக்சன் கடந்த நல்ல நாட்களை ஆசையுடன் நினைவு கூறுகிறார், குறிப்பாக ஜெரால்ட் விக்ரமசூரியவின் கோட்டையிலுள்ள சிறுவர் புத்தக நிலையம். “ அது எமக்கு வீட்டைப் போன்றது. க்ளறேன்ஸ், நான், அன்னேஸ்லி பகல் வேளைகளில் அங்கிருப்போம். ஜெரால்ட் விக்ரமசூரியவின் கொல்பிட்டி வீட்டிலும் சந்திப்போம். நாம் அங்கு பதிவு செய்வதோடு பயிற்சி செய்வோம்” என பகிர்கிறார்.
இலங்கையில் டிக்சன் கடைசியாக சூப்பர் கோல்டன் சைம்ஸ் இசைகுலுவுடனே இருந்தார். “1980 அளவில், இசைகுழு கலைந்தது. க்ளறேன்ஸ் தனி கலைஞ்சராக செயற்பட்டதுடன் சுவிட்சர்லாந்தில் குடியேறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” எனக் கூறுகிறார். இவர் சுவிற்சலாந்தில் இசை துறையில் மேலும் ஏழு வருடங்கள் இருந்தார்.



1987 இல் இசையினை விட்டுவிட்டு தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்தார். 2003 வரை டிக்சன் அன்னேஸ்லி மற்றும் சூப்பர் கோல்டன் சைம்ஸின் ஏனைய அங்கத்துவர்களுடன் சேர்ந்து மறு இணைவு நிகழ்சிகளில் பங்கு பற்றுகிறார். “ இது வித்தியாசமான நாடுகளுக்கு செல்ல எனக்கு வாய்பளிக்கிறது. இதுதான் இப்போதைய வாழ்க்கை” என முடிவாக கூறுகிறார்.
கிடாரிலிருந்து துள்ளிப்பாயும் இன்பகரமான மெல்லிசை உலகளாவிய அவரது ரசிகர்களை தொடர்ந்து களிப்பூட்டும். இவரது இசையினை தொடரும் போது, இறந்த காலத்திற்கு, அதாவது தமது இளமை காலத்திற்கு சென்று, இந்த இசை தம் உயிரை தீண்டிய போது ஏற்பட்ட முதல் தருணங்களை கொண்டாடுவர்.















The Dynamic New Sound of The Golden Chimes








