Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

கிளோட் பெர்னாண்டோ

பிறப்பு : 1947

இறப்பு : டிசம்பர் 2009

இசைப்படைப்பு : மேலைத்தேய பொப்பிசை

கிளோட் பெர்னாண்டோ, “கிங்” கிளோட் என புகழ்பெற்ற இவர் மந்திர விரல்களை கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டவர். இவை கி போர்ட் இன் மீது மென்மையாக பறப்பது மட்டுமன்றி அழகாக பாய்ந்து வரும் இசையும் இயற்றியுள்ளார்.

1947 இல் பிறந்த கிளோட், பிறப்பிலேயே திறமை மிக்கவர் என அவரது சகோதரி கூறுகிறார். அவருக்கு நான்கு வயதிருக்கும் போது, அவரது சகோதரி சங்கீதம் தொடர கஷ்டப்படும் போது, பியானோவின் உயரமேயான இவர் கேட்டதை வைத்து இசைப்பார். இவர் புனித தோமஸ் கல்லூரியில் கற்றார். இவரது பணிவும் எளிமையும் ஆசையுடன் நினைவு கூறப்படுவதுடன் பாடசாலை நண்பர்களுடன் வாழ் நாள் முழுவதும் நட்பை தொடர்ந்தார்.

இவரது தொழிலில் முன்னிலையான 80 களில் நடந்த “கிங் கிளோட்” TV நிகழ்சிகள் இன்றும் பலருக்கு ஞாபகமிருக்கும். இவர் தனது நிகழ்ச்சிக்கு புதிய கலைஞர்களை வரவழைத்து, இலங்கை மக்களுக்கு செய்துகாட்டி மகிழ்விக்க வாய்பளித்து, பார்வையாளர்களுக்கு புதிய திறமைகளை விருந்தளித்தார். இவர் “சில்டர்ன்ஸ் ரிக்கிரியேஷன் ஸ்கூல்” இனை நிறுவினார். இது இளம் திறமையான சிறுவர்களுக்கு கிங் கிளோட் TV நிகழ்ச்சிகளான ITNஇல் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும், TNL இல் நடந்த “லே அர்ன் மியூசிக் வித் கிங் கிளோட்” இலும் பாடி பங்கு பற்றுவதற்கு தளமாக அமைந்தது.

இவரது மேன்மை என்றும் இவரை அடையமுடியாதவறாக ஆக்கவில்லை. இவர் துறையிலுள்ள ஏனைய கலைஞர்களுக்கு எப்போதும் அண்மித்தவராக உதவுபவராக இருந்தார். இவர் பல கலைஞர்களுக்கு இசையினை ஒழுங்குபடுத்த உதவி செய்தார், ஏனெனில் இதில் இவரே சிறந்தவர். நாட்டிலுள்ள அனைத்து எழுத்தாளர்களிலும் மிக விரைவாக பாடல் எழுதக்கூடியவராகவும், இன்னொருவர் ஹம் பண்ணும் போதே பாடலை குறிப்பெடுக்க கூடியவராகவும் இருந்ததால் விமர்சகர்களின் பாராட்டை பெற்றார்.

கிங் கிளோடே “ஸ்பிட் பய்யர்ஸ்” இசைக்குழுவின் பிரதான கீ போர்ட் வாசிப்பவர். அதன் பின் “கிளோட் அண்ட் தி சென்சேஷன்ஸ்” இனை நிறுவினார். இவர் பிரபல பாடலான “சிட்டி ஒப் கொலோம்போ” இனை இயற்ற  கிளோட் அண்ட் தி சென்சேஷன்ஸ் உடன் இணைந்து நோஎளினே ஹோண்ட்டர் பாடினார். இந்த பாடலானது கொழும்பின் அழகையும் மிகுதியையும் வர்ணிக்கிறது.   சூரியா லேபலுடன் EP அல்பம் ஆன “சிட்டி ஒப் கோல்லோம்போ” மேலும் மூன்று பாடல்களை கொண்டது; சாம் நாதன் பாடிய “ஐ வில் தின்க் ஒப் யு”, தேச்மொந்து டிசில்வா பாடிய “சோல் பிலீவேர்”, நோஎலீன் ஹோண்ட்டர் பாடிய “தி கேர்ள் வாஸ் மீ”. பாடல்களின் வசனம், தொகுப்பு மற்றும் இயக்கம் யாவும் கிளோட் பெர்னாண்டோ இனாலேயே செய்யப்பட்டது.

Listen to clips from the album – City of Colombo by Claude & the Sensation

“Big future for sinhala pop” by Gaston, February 13, 1972
“Claude & The Sensations”, Observer Magazine, May 17, 1972
“Out soon an extra-special all-star disc” by Louis Benedict
“Fab Live Sooriya Show”, Ceylon Daily News, August 11, 1971
Claude & The Sensations photo shoot for Sooriya album cover, 1971

70 களில் கிளோட் நேரடி சூரியா நிகழ்சிகளுக்கு இசை ஒழுங்கு செய்ததுடன் முதலாவது சூரியா பொப் ஒர்கேச்ட்றா நேரடி சூரியா நிகழ்ச்சியில் 1972 செப்டம்பர் 30 நடைபெற்றது.

“Pop orchestra the answer?”, Sunday Observer, October 08, 1972

ஒலி தொடர்பான இவரது கருத்தும், சங்கீதம் தொடர்பான இவரது அறிவும் இணைந்து சங்கீதத்துடன் விளையாடக் கூடிய தனித்துவமான ஆற்றலை வழங்கியிருந்தது. இவரது தாளம் இளம் மற்றும் வயதானவர்களின் மத்தியிலும் ஒரேயளவில் புகழ் பெற்றிருந்ததுடன் இசையை விட்டு எதுவும் இவரை தள்ளி வைக்காது.

மனதளவில் கிளோட் எப்போதும் ஒரு ஆசிரியர். ஹிட் பாக்டரியின் இசை இயக்குனரும்,  கிளோடின் மாணவருமான ரங்கா டச்சனாயகே இவரை எளிய நடைமுறைகளை கொண்ட சிறந்த ஆசிரியர் என நினைவு கூறுகிறார். அரும்பும் கலைஞர்களை இனம் காணும் ஆற்றல் இருந்ததுடன் அவர்களுக்கு தமது இசையை வளர்க்க உதவி செய்தார். ஒரேயேண்டல் இசை கலைஞரான R. K. ரொக்சாமி மேற்கத்தேய இசையின் கோட்பாடுகளை கிளோட் பெர்னாண்டோவிடமே கற்றார்.

கிளோட் குரல் பயிற்ச்சி வகுப்புகளை வைத்தார். தனது 37 வருட கற்பிக்கும் அனுபவத்தினை வைத்து புதிய சுவாரிஸ்யமான முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் வைத்து மாணவர்களின் அதி சிறந்த திறமைகளை வெளி கொண்டு வந்தார். இவர் பல பாணிகளை கற்றுக் கொடுத்தார். ப்ரோட்வே, செமி கிளாசிக், படப் பாடல்கள், ஜாஸ், மற்றும் பிரபல பிடித்தவைகள்.  அது மட்டுமன்றி மாணவர்களுக்கு மேடை, வானொலி மற்றும் CD இல் பாடும் வாய்பை வழங்கினார். 2008 இல், சிறுவர்கள் பாடல் மற்றும் ஆடலை ஆராய்வதன் மூலம் இசையில் இன்பத்தை காணச் செய்ய வேண்டும் எனும் நோக்கோடு “சில்டர்ன்ஸ் ரிக்கிறியேஷன் ஸ்கூல்” இனை சீரமைத்தார். அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடங்களாவன- ஹிப் ஹொப், லட்டின், புயுஷன், ப்ரீ ஸ்டைல், டாப் ஹட் டான்சிங் மற்றும் குரல் பயிற்சி, பாடல்.

கிங் கிளோட் தனது 62 ஆவது வயதில் டிசம்பர் 2009 இல் மரணமடைந்தார். இசை துறைக்கும், நாட்டிலுள்ள இளம் திறமைசாலிகளுக்கும் இது பேரிழப்பாகும். இளம் திறமைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அவரது குறிக்கோளிலும், இசைகளைஞர்கள் மற்றும் அவர் தொட்டுச் சென்ற மாணவர்களின் உள்ளங்களிலும் அவர் என்றென்றும் வாழ்வார்.

Claude Fernando performing at a hotel
King Claude with Students 2007 December
Claude Fernando performing at a hotel
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!