மத்திய இலங்கையின் கிராமத்து மலை பிரதேசமான ஹபுதலேயில் பிறந்த க்ளரேன்ஸ், இரத்னபுரயிலுள்ள படுகேடரவிட்கு தனது பெற்றோருடன் 1966 இல் இடம் பெயர்ந்தார்.
சிறி சங்கபோ கொரியவின் கீழ் ஒலிப்பதிவு செய்யும் முதல் வாய்ப்பு கிடைத்தது எனினும் தகுந்த பாடகரை தேடும் சவாலிருந்தது க்ளரேன்ஸ் தனது நண்பரான பிரேமசிங்ஹே மரம்பவிடம் உதவி கேட்டார். இறுதியில் அன்னேஸ்லி மாலவனவின் அறிமுகம் கிடைத்தது. இது அன்னேஸ்லி மற்றும் க்ளரேன்ஸின் இசை பயணத்திற்கு ஆரம்பமாய் அமைந்ததுடன் புதியதொரு இசைக்குழுவான “தி மூன்ஸ்டோன்ஸ்” உருவானது.
சங்கபோவின் வீட்டில் பல பயிற்சி பதிவுகளின் பின், சங்கபோ அவர்கள் இலங்கை வானொலியில் வானொலி கலைஞரான விஜய கொரியாவை சந்திக்க ஏற்பாடு செய்து இலங்கை வானொலி கூடத்தில் சில பாடல்கள் ஒலிப்பதிவும் செய்யப்பட்டன. இலங்கை வானொலி “சடடேய் ஸ்டார்ஸ்” நிகழ்ச்சியில் பாடல்களை ஒலிபரப்ப, இவர்கள் ஒரே இரவில் நட்சத்திரங்கள் ஆனார்கள்.
க்ளரேன்ஸ் இயற்றிய முதல் பாடலும் தி மூன்ஸ்டோன்ஸ் செய்த முதல் பாடலுமான “திலீப பொடிபுத்து”, கருணாரத்னே அபேய்சேகர தனது மகனுக்கு எழுதியதாகும்.
அறிமுகம்
க்ளரேன்ஸின் முதலாவது அல்பம் வெளியீடு பிலிப்ஸ் லேபல் அணிவரிசை இலக்கம் JPVC 007, பெரு வெற்றியீட்டிய “மங்கோ நந்தா” இதில் அடங்கும்.
க்ளரேன்சே தனது நண்பரின் திருமணத்தில் “தி பீகோன்ஸ்” இன் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு சிங்கள பொப்பிசைக்கு இலத்திரனியல் கருவிகளை அறிமுகம் செய்தார்.
இது அக்காலத்தில் கேட்டிராத ஒரு புதிய பிரிவிற்கு கதவுகளை திறந்து விட்டிருந்தது.

பயணம்
க்ளரேன்ஸின் ஆக்கங்கள் எப்போதும் கேட்பவர்களின் மனங்களை தொடும் வகையில் எளிமையானதாகவும், அர்த்தமுள்ள வரிகளுடனும், அனேகமாக உண்மை சம்பவங்களை சாடியும் இருந்தது.









1970 இல் தி மூன்ஸ்டோன் இசைக்குழுவை விட்டுச்செல்ல க்ளரேன்சே முடிவெடுத்ததுடன் ஒரு புதிய இசைக்குழுவை உருவாக்க, ஜெரால்ட் அதற்கு “தி கோல்டன் சைம்ஸ்” என நாமம் சூட்டினார். இந்தளவில் ரசிகர்கள் க்ளரேன்ஸின் அற்புதமான பாட்டெழுதும் திறனையும் இன்னிசை தொகுக்கும் ஆற்றலையும் நன்கு அறிந்து இருந்ததால் அவரது ஒவ்வொரு படைப்பும் பெரும் வெற்றியீட்டின. தி கோல்டன் சைம்சின் முதல் வெளியீடு சூரியா லேபலின் அணிவரிசை இலக்கம் CHB 014.






1972 இல் டிக்சன் குனரத்னேவயுடன் சேர்ந்து க்ளரேன்சும் தி கோல்டன் சைம்ஸ் இலிருந்து வெளியேறி அன்னேஸ்லியுடன் இணைந்தார். 1973இல் இவர்கள் புதிய இசை குழுவினை ஆரம்பித்தனர். இதற்கு ஜெரால்ட் “தி சூப்பர் கோல்டன் சைம்ஸ்” என பெயரிட்டார்.



1974 இல் இலங்கையின் மிகச் சிறந்த பாடலாக தி சூப்பர் கோல்டன் சைம்சிட்காக க்ளரேன்ஸ் இயற்றிய “கதரகம” பாடல் விருது பெற்றது.
“பொப் அன்ட் டீன் பாண் பெயார்” சஞ்சிகை நடத்திய கருத்து கணிப்பில் க்ளரேன்சிற்கு 1974 மற்றும் 1976 இற்குரிய இலங்கையின் மிகப் பிரபலமான பாடலாசிரியருக்கான விருது கிடைத்தது.
பிரபல இசைக்கு தொகுப்பாளராக மட்டுமன்றி திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் திண்மமான வெற்றிகளை ஈட்டியுள்ளார். அவரது முதல் திரைப்படம் 1975 இல் வந்த சிங்களபடமான “சிகுருளிய” இதில் வந்த “வசந்தயே மல் கேகுளை” பாடலே இலங்கையில் ஐந்துவரிகளை கொண்ட முதல் கோரஸ். இந்த படத்தில் க்ளரேன்ஸ் தி கோல்டன் சைம்ஸ் உடன் ஒரு விருந்தில் இருப்பது போல் உள்ளது.
“மங்களா”, “அபேக்ஷா”, “சதுமதுர”, ”சண்டி ஷ்யாமா” என்பன க்ளரேன்ஸ் சங்கீத இயக்குனராக இருந்த சில படங்களாகும். இவர் சில படங்களுக்கு பாடலும் பாடியுள்ளார்: “கொலம்ப சந்நிய” படத்திற்காக “நெலும் பொகுறு வகே”, “ஜானக சஹ மஞ்சு” படத்திற்காக பிரபல பின்னிசை பாடகியான லதா வல்பொலவுடன் “லோகே ஜீவத் வன்னட” எனும் டூயட், மற்றும் பல.
1975 இல் க்ளரேன்ஸ் தொகுத்து இயற்றிய பாடலான “மஹா பலவதுனே” பாடலானது இலங்கையில் வைக்கப்பட்ட சீரமைக்கப்படாத இயக்கத்தின் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.
1978 இல் இலங்கையில் வெளியான முதல் ஒழி நாடாவான “எனி டைம்-எனி வெயார்” இணை க்ளரேன்ஸ் இயக்கினார்.
1979 இல் குழுவிலிருந்து அன்னேஸ்லி வெளியேறிய பின், க்ளரேன்ஸ் தி சூப்பர் கோல்டன் சைம்ஸ் இலிருந்து வெளியேறி துணிகரமாக தனியாக தொழில் தொடங்கினார். இது பல பாடல்களை உருவாக்கியது- “மலட்ட பம்பெரெகு சே”, “செண்டே வளவன்”, “தினக்க மே நடி”, “அருண கிறன”, “குமரியக்”, “சந்த பானே”, “ஹட விலே”, “ஹன்தானே”, “ரன் துணுக்கே மல சே” மற்றும் ஏனைய பல, இவை க்ளரேன்ஸின் எல்லாப் படைப்புகளையும் போலவே இன்றளவும் புகழப்படுகிறது.
1982 இல் இலங்கை கிரிக்கட் அணிக்கு உலக டெஸ்ட் கிரிக்கட்டிட்கு நுழையும் வரம் கிடைத்த போது, க்ளரேன்ஸ் “டெஸ்ட் கிரிக்கட் சுவேனியர்” எனும் அல்பம் இயற்றினார்.
SAARC மாநாட்டிற்கான இசையை தொகுத்து இயக்கினார். அதே நேரத்தில், செராமிக் கூட்டுத்தாபனத்தின் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதம மந்திரி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயகே வந்த போது “துவனி சிறிமா” பாடலை பாடினார்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தற்போது சமூகத்திலுள்ள தடுக்கப்பட்ட நடத்தைகளுக்காக “தேசவான் தாஸே” பாடலை இயற்றியதுடன், தந்த தாது கோவிலின் அரச யனைக்காக “சிஹ ஷக்தி” குழுவினால் செய்யப்பட “கந்து சிகரின் வட செங்கடகல புற”, அழகு ராணி போட்டிக்கு அர்பணமாக “சீகிரி ரூ லடுன் பரதை”.
1985 இல் க்ளரேன்ஸ் “மடார” இசைக்குழுவை ரூகாந்த குணதிலகே ( கீ போர்ட்), மரியாசள்ளே குணதிலகே (கீ போர்ட்/ பெண் குரல்), ராஜு பண்டார(லீட் கிடார்), கென்னெத் டி சில்வா (பாஸ் கிடார்), பிரபாத் பண்டார(லீட் கிடார்), அஜந்த தம்பா கமகே(ட்ரம்) ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். 1980 கலீல் பல புதிய பாடல்களை தொகுத்து இயற்றியுள்ளதுடன் இலங்கையின் பல பிரபல சங்கீத இயக்குனர்களுடன் சேர்ந்து செயற் பட்டுள்ளார்.






க்ளரேன்ஸ் சிங்கள தொலைக்காட்சி நாடகங்களான “சுசிமா” மற்றும் “நிடிகும்பா மல்” ஆகியவற்றிற்கு சங்கீதம் இயக்கியதுடன் பல விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்; இலாச்டோ, பாடா, அஸ்ட்ரா, ஆர்பிகோ, மற்றும் பல.
இவர் 100 இற்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மற்றும் 1000 இற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை இயக்கியுள்ளார்.



இவர் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார், தாய்லாந்த், சிங்கப்பூர், அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், கடைசியாக ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ்.
க்ளரேன்ஸ் சிங் லங்கா லேபல் அறிமுகத்திற்கு முன்னோடியாக இருந்தார். இது பல தடங்களை ஒரே தடவையில் பதியக்கூடிய இலங்கையின் முதலாவது ஒலிப்பதிவு கூடம். இவரது ஆழ்ந்த அறிவு மற்றும் திறமையினால், பின்னாளில் இதன் ஜெனரல் மேனேஜர் ஆக இணைந்து கொண்டார்.






1960 களில் இருந்த இலங்கையின் இசைக்கு புரட்சி செய்தவர் க்ளரேன்ஸ் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உண்மையில் இலங்கையின் பொப்பிசைக்கு தந்தை என இவர் பெயரிடப்பட வேண்டும்.
க்ளரேன்ஸ் தனது 53 ஆவது வயதில் 1966 டிசம்பர் 13 ஆம் திகதி மரணித்தார். எனினும் அவரது பாடல்கள் அவரது பசுமையான காலத்தில் இருந்தது போல் இன்றும் புகழுடனும் பசுமையாகவும் இருக்கின்றது.
அன்னேஸ்லி மற்றும் இந்திராணி ஆகியோர் காலத்துக்கு காலம் “தி ஒரிஜினல் பொப் ட்ரயோ” மூலம் பொன் நினைவுகளை கொண்டு வருகின்றனர்.












விஷேட நன்றி – ருக்ஷான் கருனானாயகே
விஷேட நன்றி – ருக்ஷான் கருனானாயகே



















Sooriya Show Vol III



















The Original Sinhala POP TRIO – Clarence/Annesley/Indrani



















The Original Sinhala POP TRIO Clarence, Annesley & Indrani



















Clarence Wijewardena With The Super Golden Chimes


















