மொரடுவ புறநகரில் பிறந்து, வளர்ந்த இளம் சானக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் பயிலும் போது தனது முதல் காதலான கிரிக்கட்டினை கண்டு கொண்டார். மிக விரைவிலேயே சிறந்த இடது கை பந்து வீச்சாளராக மட்டுமன்றி பாடசாலை அணியின் முதல் கலர்ஸ் ஆணாக தனக்கென பெயரீட்டினார்.
இந்த காலப்பகுதியில் தான் தற்போதைய மனைவியான லங்கிகா பெரேராவை முதலில் சந்தித்தார். 18 வயதான சானக இசைக்காக பெரு வேட்கை கொண்டிருந்ததுடன் இசைகுழு ஒன்றினை உருவாக்க கனவு கண்டார். இதுவே “தி வைகிங்க்ஸ்” உருவாக வழிவகுத்தது. இதனாலேதான் மொறட்டுவவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தம்மை இவ்வாறு அழைக்க முடிவு எடுத்தனர்.

அறிமுகம்
1965 இல், பாடசாலை முடிந்த பின், இசை தான் தன் வாழ்க்கை என்பதை அறிந்து கொண்ட சானக “தி பீகோன்ஸ்” இசைக்குழுவுடன் இணைந்து கொண்டார். இந்த இசைக் குழுவானது மொறட்டுவ பிரதேசத்தில் விரைவில் தமக்கென பெயர் பதித்ததுடன், கல்யாணம் மற்றும் வைபவங்களுக்கு புகழ் பெற்ற இசை குழுவானது.






1967 இல் க்ளறேன்சே விஜேவர்தன மற்றும் அன்னேஸ்லி மாலவனவின் “தி மூன்ஸ்டோன்ஸ்” இசைக்குழுவுடன் இணைந்தமையே அவரது உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இவர் இணையும் போதே விஜய கொரியாவின் அறிமுகத்தினால், இந்த இசைகுழு நன்கு ஸ்தாபித்த நிலையில் இருந்தது. ஒரு திருமண வைபவத்தில் “பீகோன்ஸ்” மின்சார கிட்டாரினை பயன்படுத்தி செய்த நிகழ்ச்சியால் அங்கு பாடிய க்ளறேன்சே விஜேவர்தன ஈர்க்கப்பட்டு சானகவை “தி மூன்ச்டோன்” உடன் இணைய அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு சூரியா லேபல் ஜெரால்ட் விக்ரமசூரியவிற்கு பதிவு செய்யும் முதல் EP ஆன “மோர் ஹிட்ஸ் பை தி மூன்ஸ்டோன்ஸ்”, அணிவரிசை CHB001 இற்காகவே ஆகும்.
பயணம்
1970 ஏப்ரல் க்ளறேன்சே விஜேவர்தன “தி மூன்ஸ்டோன்” இலிருந்து வெளியேறிய பின், சானக மற்றும் க்ளறேன்சே, விஜித்துடன் இணைந்து “ப்ரேக்வேய் ப்ரோம் தி மூன்ஸ்டோன்ஸ்” எனும் புதிய இசைக்குழுவை உருவாக்கினர். இந்த இசை குழுவானது முதலில் மொரடுவ, ஹோலி இம்மானுவேல் ஆலயத்தில் “தி பீகோன்ஸ்” இன் அன்டன் குணதிலகே (லீட் கிடார்)யையும் தற்காலிகமாக சேர்த்து கொண்டு நிகழ்ச்சி நடத்தியது.
இசை குழுவை “தி கோல்டன் சைம்ஸ்” என ஜெரால்ட் விக்ரமசூரிய ஞானஸ்நானம் செய்ததுடன் அன்டனிற்கு பதிலாக டிக்சன் குணரத்னே இணைந்தார். 1971 இல் இசைக்குழு தமது முதலாவது EP வெளியிட்டது, “தி டய்நமிக் நியூ சவுண்ட்ஒப் தி கோல்டன் சைம்ஸ்” சூரியா லேபல் அணிவரிசை இலக்கம் CHB 014.



1970 இல், சானக தனது காதலியின் கரம் நாட நினைத்து, 1971 டிசம்பர் ௦1 ஆம் திகதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.



1973இல் க்ளறேன்சே விஜேவர்தன மற்றும் டிக்சன் குணரத்னே ஆகியோர் இசைகுழுவிலிருந்து வெளியேறினாலும், சானக மற்றும் லங்கிகா இசைகுழுவினை தொடர்ந்தார். சானக மற்றும் லங்கிகா தம்பதிகள் இவர்களது குடும்பம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு மட்டுமன்றி “தி கோல்டன் சைம்ஸ்” இற்கும் உறுதியான அரணாக இருந்தார்கள்.






இசைத்துறைக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் சானகவிட்கு “கலா பூஷண” அரச விருது 2013 டிசம்பர் 15 இல் கிடைத்தது. இன்றுவரை சானக, சூறாவளியில் உள்ள கல் போல, “தி கோல்டன் சைம்ஸ்” பாஸ் கிற்றார் கேட்டவண்ணம் உள்ளது.






2015 இல் சானக பெரேரா இசை துறையில் 50 வருடங்களை பூர்த்தி செய்ததுடன் “தி கோல்டன் சைம்ஸ்” 45 வருடங்களை பூர்த்தி செய்தது. இதனை கொண்டாடும் முகமாக அணில் பாரதி மற்றும் ருக்ஷான் பெரேரா உள்ளடங்கலாக, விஜயகொரிய நிகழ்ச்சி தொகுப்பாளராக “செலிப்றேஷன் சிங் அலோங்” இசை நிகழ்ச்சி 23 ஆகஸ்ட் 2015 இல், ரமாடியா ரன்மல் ஹொலிடே ரிசோர்டில் பி.ப.6.30 இற்கு நடைபெற்றது.











