சீ. டி. பெர்னாண்டோ என பலரும் அறிந்த சிறில் ரியூடர் பெர்னாண்டோ அவர்கள் தான் கொண்டாடும் இசை தொழில் துறைக்கு 1940 இல் கால் பதித்தார். மிகவும் இளம் வயதிலேயே பாடசாலை நாடகங்கள் மற்றும் புனித மேரிஸ் கல்லூரியின் பாடற்குழுவில் பங்குபற்றிய விதமானது செயற்பாட்டு கலையில் இவருக்கு இருந்த ஆர்வத்தை எடுத்துக்காட்டியது. சிறுவனாக பாடல் மற்றும் நாடகத்திற்கு மட்டுமன்றி பேச்சுக்கலை மற்றும் பிரசங்க கலைக்கும் பல விருதுகளை வென்றுள்ளார்.
பெர்னாண்டோ பின்னர் கொழும்பிலுள்ள A.R.P மெசென்சர் சர்வீஸ் இற்கு பாடற்குழுதலைவராக சென்றார். இவரது இசை துறை மெருகேறிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் உலக யுத்தத்தில் ஈடுபட்ட படை வீரர்களை உற்சாகப்படுத்த Grand Cabaret இல் இணைந்தார்.
1946 இலேயே சீ. டி. பெர்னாண்டோ இலங்கை வானொலியில் சாதாரண வானொலி கலைஞராக இணைந்து தனது முதலாவது பாடலான “பின்சிடுவன்னே” பாடலினை பதிவு செய்தார். இரண்டு பறவைகள் சேர்ந்து ஒரு கூட்டினை கட்டி விட்டு, அருகிலுள்ள சிறுவர்களிடம் அதனை பிய்த்து விட வேண்டாம் என எவ்வாறு கெஞ்சுகின்றன என்பதை கூறும் மனதிற்கு இதமான ஒரு பாடலாக அமைகிறது.
ஒவ்வொரு பொருளுக்கும் அவர் வழங்கும் வித்தியாசமான கோணங்கள் மூலம் இவரது நிகழ்சிகள் பெரிதும் வேறுபட்டன. ஒரு பாடலில், பிச்சைக்கார சிறுவனின் நிலையையும், இன்னொரு பாடலில் கடலை விற்பவனின் பார்வையில் உலகையும் பாடுவார். மிக நுட்பமான தகவல்களுடன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, நேயர்களுக்கு புரியும் படி பாடும் இவரது ஆற்றலானது இவரது பாடல்களுக்கு காலம் கடந்த வெதுவெதுப்பினை இன்றளவில் வழங்குகிறது.
1952இல் கார்கில்ஸ் (சிலோன்) லிமிடெட் உருவாக்கிய HMV லேபலுடன் கைச்சாத்திட்டு பல தலைமுறைகளாக மனதைத் தொட்ட பல பாடல்களை பதிவு செய்தார்.
அடுத்த சில தசாப்தங்கள் இவரது பாடல்கள் பல திசைகளில் இருந்து எமது வாழ்வில் கசிந்து ஒழுகத் தொடங்கியது : இளம் சிறுவர்களுக்கு பாடப்படும் மரபு வழக்கான பாடலான “அம்பிளிமாமே” மற்றும் தரம் ஐந்து கீழைத்தேய சங்கீத வகுப்பில் பரீட்சயமான பாடல் “லோ அத நிண்டே”.

பின்னர் லேவிஸ் பிரவுன் கம்பெனியுடன் கைச்சாத்திட்டு, இலங்கையர் பலரின் மனதிற்கு இதமான பாடல் தொகுப்பான “தி கோல்டன் வோய்ஸ் ஒவ் சீ. டி. பெர்னாண்டோ” இனை இசைப்பதிவு செய்தார். தாயின் அன்பை பற்றி நினைவூட்டும் பாடலான “மா பால காலே”, தாயின் பெறுமதியினை புரிந்து கொள்ளாத ஒரு மகனின் மனதிற்கு வேதனை தரும் கதையை கூறும் பாடலான “சந்த வட ரன் தரு” என்பன உள்ளிருந்து எம்மோடு கதைக்கும் மெல்லிசைகள்.
களிப்பான ஒன்றுகூடல்களிலும் விருந்துகளிலும் அடிக்கடி கேட்கும் இன்னொரு அழுத்தமற்ற மெலடிப் பாடலான “பரவுன மல்” பாடலை 1967 இல் ஒலிப்பதிவு செய்தார். சில்வர் லைன் உடனான இவரது கூட்டானது “சீகிரி சுகுமளியே” அல்பத்தினை உருவாக்கியது. இலங்கை மங்கை ஒருத்தியை சிகிரியா சுவரோவிய கன்னிப்பெண்னுடன் ஒப்பிட்டு கூறும் களிப்பான பாடலிது. “மீ அம்ப வனயே” என்பது பெண்ணின் பெருமையை பாடும் இன்னொரு பாடல்.
1970 இல் சூரியா லேபலின் ஜெரால்ட் விக்கரமசசூரிய தமது மூன்றாவது பிரபலமான நிகழ்ச்சியினை சீ. டி. பெர்னாண்டோவுடன் இணைந்து ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு “சீ. டி. சூரியா ஷோ” என பெயரிட்டார்.



1977 இல் இவர் இறந்த பின்னர் இவரது மனைவி “தி கோல்டன் வோய்ஸ் ஒப் சீ. டி.” இனை சூரியா லேபலின் கீழ் மறு ஆக்கம் செய்ய ஜெரால்ட் விக்ரமசூரியவிற்கு அனுமதி வழங்கினார். இதனால் பழைய ஹிட் பாடல்கள் மீண்டும் பிரபலமாகின. பின்னர் தரங்க ரெகார்ட் லேபலானது 10 பாடல்கள் அடங்கிய “மல் லோகே ராணி” இனை மறு ஆக்கம் செய்தது.









அக்காலத்தில் பாடல்கள் தலைமுறைகளின் வாழ்க்கை முறை மற்றும் எண்ணங்களின் ஒழுங்கினை புகழ்வதுடன் இன்றும் உடன் பாடுவதுடன் தனித்துவமான இசைக்கு கால் தட்டுகின்றன. அவை கவர்ச்சியானவை, கேட்க இன்பமூட்டுபவை, உயிர் தரக்கூடியவை. சீ. டி. பெர்னாண்டோ உண்மையில் வரைவிலக்கணப்படி ஒரு புகழீட்டி, ஏனெனில் அவர் மறைந்து 6 தசாப்தங்கள் ஆகியும் அவரது குரலும் இசையும் மரணிக்க மறுக்கின்றன. இவரது எச்சங்கள் என்றும் வாழும், நம்பிக்கையான ரசிகர்கள் மூலம் பரம்பரை பரம்பரையாக எடுத்து செல்லப்படும் என்பது ஒரு ரகசியமில்லை.



எழுதியது: அமாயா ஸூரியப்பெரும
திருத்தம்: நதீஷா பாலிஸ்






