1947 ஜூன் 13 ஆம் திகதி இலங்கை கிராமப்பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அன்னேஸ்லி உயர் கல்வி கற்பதற்காக தனது சொந்த ஊரான இரத்தினபுரியிலுள்ள வேரளுபேயிலிருந்து தலைநகரான கொழும்பிற்கு இடம்பெயர்ந்தார். கொழும்பு நகரை அண்டிய நாவலவிலுள்ள தனது மாமாவின் வீட்டில் தங்கியிருந்து கொழும்பு புனித ஜோசப் கல்லூரிக்கு சென்றார்.
வானொலியே அன்னேஸ்லியின் இசை மீதான பிரியத்தினை ஊக்கப்படுத்தியது. (அக்காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஒரே இலத்திரனியல் ஊடகம் இதுவே). அவரது இசை வாழ்க்கையை பின்னோக்கி சென்றால், இடைவேளையின் போது நண்பர்களுடனான ஆற்றுகைகளாகும். இதனை கண்ணுற்ற பாடசாலையின் ஆசிரியரில் ஒருவரான திரு. லோகநாதன், இதனால் ஈர்க்கப்பட்டு, பாடசாலை மாணவர்கள் ஒன்றரைமணி நேர பகலுணவு இடைவேளையின் போது தமது நண்பர்களின் முன் அரங்கேற்ற கூடிய வகையில் “Interval Melodies” இனை ஆரம்பித்தார்.
எனினும், இசையில் இருந்த ஆர்வம் பாடகனாக மாற்றியது 1964ஆம் ஆண்டு ஒரு நாளில். புனித பீட்டர்ஸ் கல்லூரி அரங்கில் நடைபெற்ற “Los Caballeros” உடன் “The Spitfores” நடத்திய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அறிமுகம்
அன்னேஸ்லியின் அயலவரான பிரேமசிங்ஹே மறம்ப அவர்கள் தனது சொந்த ஊரான இரத்னபுரவில் ஒரு இசைகுழு பிரதான பாடகர் ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறது என இவரை அணுகிய போதே இவரின் அறிமுகம் தொடங்கியது. முதலில் ஐயம் ஏற்பட்டிருந்தாலும், அன்னேஸ்லி மேலும் அறிந்துகொள்ள முடிவெடுத்தார். மறம்ப தனது மிதிவண்டியில் அன்னேஸ்லியை இரத்தினபுரி கூட்டிச்சென்று முதன் முறையாக க்ளறேன்ஸ் விஜேவர்தனவை சந்திக்க வைத்தார்.
மிக விரைவிலேயே இருவரும் ஒன்றாக வேலை செய்ய முடிவெடுத்து பயிற்சிபெறவும் ஆரம்பித்தனர். சங்கபோ கோரியாவின் வீட்டில் ஒத்திகை ஒன்றை ஒலிப்பதிவு செய்தபோது, சங்கபோ மிகவும் மகிழ்ச்சியுற்று, “தி மூன்ஸ்டோன்ஸ்” (The Moonstones)– இரத்னபுரியின் இசை இரத்தினங்கள், என பெயர் சூட்டினார்.
இலங்கை வானொலியை சேர்ந்த வெர்னன் கோரியாவிட்கு சங்கபோ அறிமுகம் செய்து வைத்தார். அவர் தனது மைத்துனரான விஜய கோரியாவிட்கு அறிமுகம் செய்து வைத்தார். இறுதியாக, விஜய மூன்ச்டோனின் முதல் பாடலை, 1967 இல் இலங்கை வானொலி ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்து தனது வானொலி நிகழ்ச்சியான “சனிக்கிழமை நட்சத்திரங்கள்” இல் வானலை சேர்த்தார். இசை உலகிற்கு உட்பிரவேசிக்க ஆவணம் கிடைத்த அன்னேஸ்லி, தனது முதலாவது நிகழ்ச்சியை டென்னிஸ் விளையாட்டின்போது செய்தார். வீட்டிலிருந்து வெளியேறும் போது இவர் டென்னிஸ் ராக்கெட் உடனேயே சென்றார்.

பயணம்
இவர்களின் பாடல்களுக்கு கிடைத்த பெரியளவிலான புகழிற்கு பிற்பாடு மூன்ச்டோனிற்கு ‘தி கௌரி” நிறுவனத்துடனான ஒப்பந்தம் கிடைத்து, பிலிப்ஸ் லேபலின் கீழ் EP வெளியிடப்பட்டது. மூன்ச்டோனின் அடுத்த வெளியீடு சூரியா லேபலுடன், “மோர் ஹிட்ஸ் பை தி மூன்ஸ்டோன்ஸ்” பட்டியல் இலக்கம் CHB 001. இது உடனடி ஹிட்டானது.
அன்னேஸ்லி 1970இல் க்ளறேன்ஸ் பிரிந்த பின்பும் மூன்ச்டோனில் தொடர்ந்து இருந்தார். 1973இல் “The Super Golden Chimes” மூலம் மீண்டும் இணைந்து பின்னர் “தி ஒரிஜினல் சூப்பர் ட்ரையோ” இல் இந்திராணியுடன் சேர்ந்து அங்கம் வகித்தார்.


அன்னேஸ்லி பல இசைத்தட்டுகளை வெளியிட்டுள்ளார்- “பெஸ்ட் ஒப் அன்னேஸ்லி”, “வணபம்பரோ”, “நோன்ஸ்டாப்” மற்றும் “தொடிய”, “ கிம்பு லதா”.


“தி மூன்ச்டோன்” மற்றும் “தி கோல்டன் சைம்ஸ்” உடனான அதி வெற்றிகரமான இசை துறையினை தொடர்ந்து 1977 இல் இசை உலகிலிருந்து ஓய்வு பெற்றார். அன்னேஸ்லி திருமணம் செய்யவிருந்த பெண்ணின் பெற்றோர் இவர் இசை துறையில் தொழில் தொடர்வதை விரும்பவில்லை. தனது காதலிட்காக மயூர குழுவில் கணக்கு கிளெர்க் ஆக தொழில் செய்தார். தனது தொழிலை நிறுவனத்தின் GM ஆக 2004 இல் முடித்துகொண்ட அன்னேஸ்லி, இசை ஓய்விலிருந்து மீண்டு வர முடிவெடுத்தார்.
இவர் “அன்னேஸ்லி அண்ட் தி சூப்பர் சைம்ஸ்” எனும் இசை குழுவினை உருவாக்கினார். இது இன்றும் செய்வினையுடன் இயங்குவதுடன் “சிங் அலோங் வித் அன்னேஸ்லி” எனும் நவீன கோட்பாட்டை கொண்டுள்ளது.


1997இல், ஜோசப் இன் பழைய மாணவரான பிரியந்த கன்னங்கராவின் ஒரு ஆலோசனையின் படி ,அன்னேஸ்லி புனித ஜோசப் கல்லூரியின் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு “ஸ்டார்ஸ் ஒப் தி 70’ஸ்” இணை ஒன்று திரட்டினார். இது பெரும் வரவேற்பை பெற்றதுடன், 1999இல் மொரடுவயிலும் 2000 இல் ரத்னபுரவிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னேஸ்லி வருடந்தோறும் இதனை தொடர்வதுடன் “ஸ்டார்ஸ் ஒப் தி 70’ஸ்” இணை நாடு பூராவும் பல நகரங்களுக்கும், வெளி நாடுகளான ஆஸ்திரேலியா, கனடா மற்றும் UAE இற்கும் கொண்டு சென்றுள்ளார்.



Kandayam Gee (Hits In Harmony)

Moratuwa by The Super Golden Chimes

The Original Sinhala POP TRIO Clarence, Annesley & Indrani

Kandayam Gee (Hits In Harmony)
