இவரது பெயரானது வயது, மொழி, இடம் மற்றும் பரம்பரை வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் தெரிந்தது. இந்நாட்டின் எந்தவொரு பிரதான நிகழ்ச்சியின் போதும் இவரது ஒற்றைப் படைப்பு பாடப்படுகிறது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் இசையின் படைபாளி ஆனந்த சமரக்கோன் அவர்களே.
மிகவும் பிரகாசமான நட்சத்திரங்கள் எரிவது மிகவும் குறுகிய காலமே என்பர். இது ஆனந்த சமரக்கோனின் வாழ்கைக்கு மிகவும் பொருந்தும். இவர் வரலாற்றில் இலங்கையின் தேசிய கீதத்தினை இயற்றியவர் மட்டுமன்றி பரந்தளவில் புதுமை படைக்கும், திறமைமிக்க மற்றும் பெருவருத்தம் தருகிற வாழ்விற்கு உரியவரானார். இவர் தனது 51ஆவது வயதிலேயே இறந்தார்.
ஆனந்த சமரக்கோன் அவர்கள் 13ஆம் திகதி ஜனவரி 1911இல் படுக்கையில் உள்ள லியன்வேல கிராமத்தில் சாமுவேல் சமரக்கோன் மற்றும் டொமினாக பீரிஸ் தம்பதியின் புதல்வராக, எகோடஹகே ஜார்ஜ் வில்ப்றேத் அல்விஸ் சமரக்கோனாக பிறந்தார். ஏனைய இசை கலைஞர்களை போலவே சமரக்கோன் அவர்களும் தனது திறமைகளை பாடசாலை காலம் முதலே காட்டத் தொடங்கிவிட்டார். அவர் முதலாவதாக வேவல அரச சிங்கள பாடசாலைக்கு சென்றார். பாடசாலைக் காலத்தில் ஒரு முறை இவர் கணக்கு செய்யாது பாடல் வரிகளை எழுதி பிடிபட்டுள்ளார். கோபப்பட்ட கணித வாத்தியார் எழுதிய பாடலை பாடுமாறு கூற, இவரும் பாடிவிட்டார். அந்த பாடலானது இவர் தினமும் பாடசாலைக்கு வரும் போது கடக்கும் வேரஹா நதியினை பற்றியது. இந்த இளம் திறமையினை செவியுற்ற ஆசிரியரின் கோபம் சந்தோஷமாக உருமாறியது. பின்னர் இவர் தனது தாய் கற்பிக்கும் கோட்டேயிலுள்ள கிறிஸ்டியன் கல்லூரிக்கு மாற்றமானார். இவர் பாடசாலைக்கு இயற்றிய பாடலானது பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியின் போது முதலிடம் பெற்றது.

1930 களின் ஆரம்ப காலப்பகுதியில், 20 வயதளவில் தனது முன்னாள் பாடசாலையான கிறிஸ்டியன் கல்லூரியில் சங்கீதம் மற்றும் கலை கற்பிக்க ஆரம்பித்தார். 1933 இல் ரவீந்திரநாத் தாகூரின் இலங்கை விஜயமானது இவரது வாழ்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தாகூரின் கலை நிகழ்ச்சியிலிருந்த உறுதியான கலாச்சார வேரினால் ஈர்க்கப்பட்ட இளம் கலைஞர்கள் பலர் அவரது நுண்கலை பாடசாலையான “சாந்தி நிகேதன்” இல் இணைந்து கொண்டனர். அவர்களுள் நமது இளம் திறமைசாலியான சமரக்கோனும் அடங்கினார். இவர் நந்த லால் போஸின் கீழ் ஓவியத்தையும், சாந்தி தேவி கோஷின் கீழ் இசை மற்றும் பாடல்களைக் கற்றுக்கொண்டார். தனது படிப்பினை வெளியூரில் முடிக்குமுன் 1937இல் இலங்கைக்கு திரும்பி வந்து கற்பிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் சூரியா லேபலின் ஸ்தாபகரான ஜெரால்ட் விக்ரமசூரியா அவர்கள், ஆனந்த சமரக்கோனும் அவரது மனைவி (இவரும் இசையினை பின் தொடர்பவர்) இவர்களது புகைப்படம் ஒன்றினை பத்திரிகையில் கண்டு அவரின் கீழ் கிழக்கத்திய இசையினை கற்க ஆரம்பித்தார். அந்த காலத்திலேயே ஆனந்த சமரக்கோன் அவர்களுக்கு புதுவிதமான சிங்கள இசையினை உருவாக்க வேண்டுமென்ற பெரிய எண்ணங்கள் இருந்ததாக ஜெரால்ட் எழுதியுள்ளார். இவர் ஹிந்தி இசையின் பிடியிலிருந்து சிங்கள இசையினை விடுவித்தமைக்காக சம்ரக்கோனை பாராட்டுகிறார்.



1940கள் சமரக்கோனின் வெற்றியினை கண்டன. 1939 இல் தனது முதலாவது பாடலை பதிவு செய்ததுடன் பல பாடல்களை பதிவு செய்தார். அவற்றுள் பெரும்பாலானவை இளம் பாடகியான லீலவதியுடனான டூயட்டுகளாகும். இவரது இசையின் பாணி இவராலேயே உருவாக்கப்பட்டது. எந்த நேயர்களாலும் கிரகித்து புரிந்து கொள்ளக்கூடியதாக அமைவதாலும் இலங்கையின் கிராமத்து உணர்ச்சிகளை தருவதாலும் இவரது பாடல்கள் பெரும்புகழ் பெற்றன. லீலாவதி இறந்த பின் ஸ்வர்ணா டி சில்வாவுடன் பாடினார். பின்னர் தேசிய கீதமான “நமோ நமோ மாதா” 1946இல் இவருடன் பதிவு செய்யப்பட்டது. “பொசன் போஹோடா”, “போடிமல் எதனோ”: “புஞ்சி சுதா”, “சிறி சாரு சார கேடே” என்பன இவரது சில புகழ் பெற்ற பாடல்களாகும்.



இவரது மிகப் பெரும் சாதனையான “நமோ நமோ மாதா”, முதலில் தேசிய கீதமாக இயற்றப்படவில்லை. தேசிய கீதத்திற்கான விண்ணப்பம் கோரிய போது ஆனந்த சமரக்கோன் இதனை சமர்பிக்க்கவுமில்லை. சாந்தி நிகேதனில் தனது காலத்தினை கழித்துவிட்டு திரும்பும் போது வானிலிருந்து தாய் நாட்டை கண்டு ஈர்க்கப்பட்டு இதனை எழுதினார். 1951இல் அரசானது இதனை தேசிய கீதமாக தேர்ந்தெடுத்தது.






பிந்திய 1940 இல் இந்தியாவிற்கு சென்று ஓவியத்துறையில் பெரு வெற்றியீட்டினார். அதே நேரத்தில் அவரது வாழ்வின் பெரும் துயர் நேர்ந்தது. தனது ஒரே மகனை 5 வயதில் இழந்தார். இவர் தனது சோகத்தினை இசையின் பக்கம் திருப்பி “பஹன நிவீ கியா” எனும் பாடலை இயற்றினார்.



பின்னாளில் வெளிவந்த இவரது ஓவியங்களிலும் அசல் தன்மை காணப்பட்டது. சந்தையில் கிடைக்கும் திரவ வர்ணங்களை பாவிக்காது, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை மட்டுமே பாவித்தார், உதாரணமாக, தூளாக்கிய சிவப்பு சந்தனம், கோடுகொளவிலிருந்து வல்லாரை கீரை பச்சை நிறம், முட்டை வெள்ளைகரு அல்லது கிரிமெடியிளிருந்து சுன்னாம்பிலிருந்து வெள்ளை, விளக்கு கரியிலிருந்து கறுப்பு மற்றும் இன்னும் பல. நிறங்களை கலப்பதற்கு கஜு பால் அல்லது விளாம்பழ ஜூஸ் பயன்படுத்தினார். வியக்கத்தக்க விடயம் என்னவெனில் இவரது படைப்புக்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததுடன் அந்நாளில் இருந்த ஓவியங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டிருந்தது.



இவரது இழப்பின் பின் இசையில் தொய்வு ஏற்பட்டது. 60 ஆம் ஆண்டில், தமது சேவை காலம் முடியும் முன்னே இரண்டு பிரதம மந்திரிகள் இறந்ததை தொடர்ந்து இவரது படைப்பான தேசிய கீதம் எத்தனையோ கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பல கவிஞர்கள், பண்டிதர்கள் மற்றும் புத்த பிக்குகள், இவர் தனது தேசிய கீதம் மூலம் நாட்டிற்கு பிழையான சகுனம் கொண்டுவந்ததாக சாடினர். இதனை தொடர்ந்தே ஆரம்ப எழுத்திலுள்ள “கன” வானது “ந மோ ந” வாக மாறியது.
அசலில் இருந்த “நமோ நமோ மாதா” வானது “ஸ்ரீ லங்கா மாதா” வாக மாற்றும் நிர்ப்பந்தத்திற்கு அரசு ஆளானது. இவரது ஒப்புதல் வினவப்படாமல் நடைபெற்ற இந்த மாற்றமானது இன்னும் இவரை சோகத்திற்குள்ளாக்கியது. இதுவே இந்த பெரும் தொகுப்பாளருக்கு கடைசி அடியாக இருந்திருக்கும். இவர் தனது 51 ஆவது வயதில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இவரது இசைப் பாணி பல சிறந்த கலைஞர்களை ஊக்கப்படுத்தியிருக்கின்றது, சுனில் சாந்த, சோமபால, சித்ரா, சி.டி. பெர்னாண்டோ ஆகியோர் தமக்குரிய வேறுபாடுகளுடன் இதற்கு ஒத்த இசையினை பயன்படுத்தினர். அதி சிறந்த இசையமைப்பாளர், பாடகர், ஓவியன், கவலையான வாழ்க்கை கதை கொண்ட ஆனந்த சமரக்கோன் நம் மத்தியில் இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தினமும் இவரது ஊக்கப்படுத்தும் படைப்புக்கு குரல் கொடுப்பதன் மூலம் இவரது மரபு ஒவ்வொரு நாளும் வாழ்கிறது.
கலாசார அமைச்சின் ஆணையின் கீழ் ஆனந்த சமரக்கோன் இயற்றிய தேசிய கீதத்தினை சூரியா 1979 இல் பதிவு செய்தது.
70 களின் பின் ஆனந்த சமரக்கோனினால் எழுதப்பட்ட “அசே மதுர” பாடல் “The Super Golden Chimes” குழுவால் சூரியாவில் பதிவு செய்யப்பட்டது.



எழுதியது- தாரக ரன்சிகோடா
திருத்தம் – நதீஷா பாலிஸ்











