Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

அஜந்த ரணசிங்கே

பிறப்பு : 1940

மறைவு : 27 பெப்ரவரி 2016

இசைப்படைப்பு : பலதரப்பட்டவை

அஜந்த ரணசிங்கே தலம்மஹரவில் 1941 இல் பிறந்தார். அவர் நுகேகொடவிற்கு இடம்பெயர்ந்தாலும் அவரது பிள்ளைப்பருவம் பெரும்பாலும் கிராமத்து சலசலப்பில் கிராமத்திலேயே கழிந்தது. இவரது இந்த இலங்கையின் கிராமத்து அனுபவமானது இவரது பாடல்களில் பிரதிபலிக்கிறது, எமது நாடான இந்த அழகிய தீவை வர்ணித்து எழுதியுள்ளார்.

நுகேகொடவிற்கு இடம்பெயர்ந்தவுடன் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். அதே நேரத்தில் சிலுமின மற்றும் பெரமுன நாளேடுகளின் சிறுவர் பக்கத்திற்கு கவிதைகள் சிறுகதைகள் எழுதுவதன் மூலம் தனது எழுத்து திறனை பரிசோதிக்க ஆரம்பித்தார். 1965 இல் ஒரு இளைஞராக தினமின நாளேட்டின் பணியாளராக, நிருபராக இணைந்தார். புத்தம் புதிய கருத்துக்கள் மற்றும் தீச்சுடர் போன்ற எழுத்தினை ஆயுதமாக கொண்ட இந்த இளைஞர் லேக் ஹவுஸ் நாளேடுகளில் தனது தொழில்துறையில் உயரத்திற்கு சென்றார்- பிரதி பத்திரிகை ஆசிரியர், உள்நாட்டு செய்தி பத்திரிகை ஆசிரியர், மேலதிக பிரதான பிரதி பத்திரிகை ஆசிரியர் மற்றும் சிறப்பியல்பு பத்திரிகை ஆசிரியர். கடைசியாக நவயுகயவின் பிரதான பத்திரிகை ஆசிரியரானார். லேக் ஹவுசிலிருந்து வெளியேறிய பின் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நிபுணராக இணைந்தார். ஒரு எழுத்தாளராக பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். “விண்கல் பாஸ்” எனும் நாவல் மற்றும் “சொல்டாடுவா பெர்ள பெமிநியாத” எனும் குறுங்கதை என்பன அடங்கும்.

Young Ranasinghe

கருணரத்னே அபேயசேகரவின் லமா பிடியவினூடாக பாடலாசிரியராக அவரது பயணம் தொடங்கியது. பிரபல பாடகர்களான விக்டர் ரத்னாயகே, சிசிர செனரத்னே, இந்திராணி விஜெபண்டார, டி.எம். ஜெயரத்னே, நீலா விக்ரமசின்ஹே, அஞ்சலின் குணதிலகே மற்றும் எச்.ஆர்.ஜோதிபால ஆகியோருக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவர்கள் சூரியாவுடன் ஒலிப்பதிவு செய்துள்ளனர். பாடல் எழுதுவதன் மூலம் சினிமாத்துறையில் பங்களிப்பு செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர்களான பிரேமசிறி ஹேமதாச, சரத்தசநாயகே மற்றும் சோமதாச எல்விடிகல ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

 

தனக்கு உண்மையாய் இருந்ததுடன், தனது வேர் மூலங்களுடன் பின்னிப்பிணைந்து இவர் எழுதிய பாடல்கள், எமது தேசத்தினை மூலமாக கொண்டவர்களின் எண்ணங்களையும் உணர்சிகளையும் தூண்டக்கூடியதாக இருந்தது. எமது தீவினை படர்ந்துள்ள மெல்லமைதியானது “இந்துநில் கங்குலேல்” மற்றும் “சிலி சிலி சீதலஎல்லே” பாடல்களில் அழகாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது. இப்பாடல்கள் எமக்கே உரித்தான இவற்றினை எண்ணி பெருமைப்படவைப்பதுடன் துதிக்கவைக்கின்றன. இப்பாடல்கள் எமது வாழ்கையில் ஊடுருவியுள்ளன. இந்த அழகினை நேரில் பார்க்க நாட்டிநூடாக பயணம் செல்லும் போது இவற்றையே இசைக்கிறோம். காதலும் அதன் விளைவுகளாலும் ஏற்படும் உணர்சிகளை வெளிக்கொணரும் இவரது ஆற்றல் “ரன்கேன்டேன் பண்டா” மூலமாக துள்ளியமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காதலர்கிடையில் சிக்கிய பெண்ணின் மனப்போராட்டம் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. எமக்கு என்றும் பிரியமான “குறும்பெட்டி மெஷிமே” பாடலானது இளம் தேங்காயினால் கையால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் பிள்ளைகளை பற்றி ஞாபகமூட்டுகின்றது. பாடல்கள் எழுதுவதில் இவர் உண்மையில் பயிற்சித்திறன் வாய்ந்தவர். எடுத்துக்காட்டாக தனது அனுபவம் மற்றும் கொள்கைகள் மூலம் ஆணித்தரமான வார்த்தைகள் மூலம் ஞாபகங்கள் மற்றும் தன்னிச்சையான விளைவுகளை உருவாக்கும் தனித்துவமான ஆற்றலை பெற்றவர்.

இவரது திறமைகள் மதிப்புமிக்க பல விருதுகள் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வருடத்திற்கான சிறந்த பாடல் எழுத்தாளருக்கான ஜனாதிபதி விருதினை மூன்று முறைகள் வென்றுள்ளார். அரசின் இலக்கிய விருதினையும் வென்றுள்ளார்.

Ajantha Ranasinghe receiving President's award from former President J.R. Jayawardena

பெப்ரவரி 27 ஆம் திகதியில் தனது 75 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார். இவர் தவறிப்போனாலும் இவரது பாடல்கள் கடைசிவரையில் ஒவ்வொரு இலங்கையினரினதும் ஒரு பகுதியாகவிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Awards
Dr. Ajantha Rnasinghe with Pandit W. D. Amaradewa and Jothipala
Awards

ALBUMS

Sisira Senaratne
Best of Neela & TM
Best of Neela & TM
Sooriya Show Vol 3
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!